ரொம்ப அப்செட்டாக இருந்தால்.. அவன் முகத்தை பார்க்கணும்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண் வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடிப்பதிலும் ஆர்வம் காட்டிவரும் கீர்த்திக்கு; கணவர் ஆண்டனி பக்கபலமாக இருந்துவருகிறார். இந்நிலையில் அண்மையில் கீர்த்தி சுரேஷ் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முதல் படத்திலேயே அமைதியான, பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய அவர் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்த் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை வெளி காண்பித்து மிகப்பெரிய ஹீரோயினாக வலம் வந்தார்.

தேசிய விருது: இப்படிப்பட்ட சூழலில் நடிகையர் திலகம் என்று புகழப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அதுவரை கீர்த்தி சுரேஷுக்கு நடிக்கவே தெரியவில்லை என்று சொன்னவர்கள் எல்லாம் அந்தப் படத்தை பார்த்து வாயடைத்து போய்விட்டார்கள். மேலும் அப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். ஆனால் தேசிய விருது பெற்றால் வாய்ப்புகள் ஒரு நடிகைக்கு தொடர்ந்து கிடைக்காது என்ற ராசிக்கேற்ப கீர்த்திக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டது.

Actress Keerthy Suresh has revealed what she does when she is upset
Photo Credit:

கோலிவுட் டூ பாலிவுட்: அவ்வப்போது தமிழில் தலை காட்டி வந்த அவருக்கு மாமன்னன் படம் நன்றாக கம்பேக் கொடுத்தது.அதில் பெரிய ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்றாலும் கீர்த்திக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக மீண்டும் அவர் பிஸியானார். அதன்படி சைரன், ரகுதாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றாலும் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் ஹிந்தியிலும் பேபி ஜான் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.

திருமணம் செய்துகொண்ட கீர்த்தி: சூழல் இப்படி இருக்க அவர் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் கோவாவில் வைத்து திருமணம் செய்தார். அந்தத் திருமணத்தில் விஜய், திரிஷா என பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டினாலும்; அவருக்கு முன்னர் போல் பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கடைசியாக அவர் நடித்த உப்பு கப்புரம்பு படமும் தோல்வியைத்தான் சந்தித்தது.

கீர்த்தியின் பேட்டி: இந்நிலையில் அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கீர்த்தி சுரேஷ் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர்,"நான் அப்செட் ஆகிவிட்டேன் என்றால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக்கொண்டு தனியாக ட்ரைவ் செய்வேன். அப்போது நல்ல இசையை கேட்பேன். அதுமட்டுமின்றி வீட்டில் நான் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். எந்த அப்செட் வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் அத்தனையும் காணாமல் போய்விடும்" என்றார். அவரது அந்தப் பேட்டி இப்போது ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X