கீர்த்தி சுரேஷ் ஒரு முடிவோடுதான் இருக்காங்க போல.. திருமணத்துக்கு பின் இப்படியா?
சென்னை: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் ரகுதாத்தா, சைரன், மாமன்னன் ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் மாமன்னன் படம் மட்டும்தான் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஹிந்தியில் வெளியான பேபி ஜான் திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கிடையே அவர் கடந்த வருடம் தனது காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார்.
மலையாள திரையுலகில் அறிமுகமாகி பிறகு தமிழில் ஹீரோயினாக வந்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் அவருக்கு ஆரம்பத்தில் சில படங்கள் கைகொடுக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஒரு கண்ணு பாடலில் கீர்த்தி சுரேஷின் எக்ஸ்பிரெஷன் எல்லாம் நன்றாக இருந்ததை அடுத்து ரசிகர்களின் கண்கள் கீர்த்தி சுரேஷை கவனிக்க ஆரம்பித்தன.

முன்னணி நாயகி: அதனையடுத்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வரிசையாக வர ஆரம்பித்தன. அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜினியுடன் அண்ணாத்த என வரிசையாக படங்களில் நடித்தார். அவர் வரிசையாக நடித்து நல்ல நடிகை என்ற பெயரை எடுத்தாலும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க அவர் தெலுங்கில் மகாநடி என்ற படத்தில் நடித்தார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான அந்தப் படம் கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது.
ரீ என்ட்ரி தந்த கீர்த்தி: இதற்கிடையே தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் அவருக்கு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. அதில் அவருக்கு பெரிய ஸ்பேஸ் கிடைக்காவிட்டாலும் கிடைத்ததில் தனது நடிப்பை தரமாக வெளிப்படுத்தினார். தொடர்ந்து சைரன் படத்தில் நடித்த அவருக்கு மீண்டும் தோல்வியே கிடைத்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் ரகுதாத்தா, பேபி ஜான் ஆகிய படங்கள் வெளியாகின. ஆனால் அந்த இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன.
திருமணம்: இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் பத்து வருடங்களுக்கும் மேலாக ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்துவந்தார். இந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து இரண்டு பேருக்கும் கடந்த வருடம் கோவாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்கள். நேற்றுகூட ஒரு பார்ட்டியில் இருவரும் கலந்துகொண்டார்கள்.
சின்னத்திரையில் கீர்த்தி: திருமணத்துக்கு பிறகும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதில் கவனம் செலுத்தவிருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில் சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் தற்போது களமிறங்கியிருக்கிறார் அவர். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் அப் சிங்கம் என்கிற நிகழ்ச்சியில்தான் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார். இதனை கவனித்த ரசிகர்கள் திருமணத்துக்கு பின் கீர்த்தி படு ஸ்பீடாக இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











