கிண்டலடித்த நெட்டிசன்கள்.. அதே உடையில் போட்டோஷுட் எடுத்து கெத்து காட்டிய கீர்த்தி சுரேஷ்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.
தமிழில் தற்போது உதயநிதியுடன் மாமன்னன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் வடிவேலுவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் தசரா, போலா சங்கர் ஆகிய படங்கள் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி கடந்த 2013ம் ஆண்டில் கீதாஞ்சலி என்ற மலையாளப் படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

தேர்ந்தெடுத்த கதைக்களங்கள்
நடிகை சாவித்ரியின் வரலாற்றை சொன்ன மகாநடி என்ற படம் கீர்த்தி சுரேஷிற்கு திரையுலகில் சிறப்பான கவனத்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து இதேபோன்ற கதைக்களங்கள் அமைய, சுதாரித்துக் கொண்ட கீர்த்தி, வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் துவங்கினார்.

நடிப்பிற்கும் முக்கியத்துவம்
தமிழிலும் விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்ற கீர்த்தி சுரேஷ், சாணிக் காயிதம் போன்ற நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தார். முன்னதாக சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி நடித்த ரஜினி முருகன் தமிழில் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

அடுத்தடுத்த படங்கள்
தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன், தெலுங்கில் நானியுடன் தசரா மற்றும் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் போன்ற படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

கலர்கலரான உடை
சமீபத்தில் வாத்தி படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரியின் திருமணத்தில் கலர்கலரான உடை ஒன்றை அணிந்துக் கொண்டு பங்கேற்றார். அந்த ஆடையை ரசிகர்களை வெகுவாக கிண்டலடித்து சமூக வலைதளங்களில் கலாய்த்து தள்ளினர். இந்நிலையில் அதே ஆடையுடன் தற்போது போட்டோஷுட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி.

கிண்டலடித்த ரசிகர்கள்
விழாக்களுக்காக போடப்படும் ஷாமியானா போல இருக்கும் அந்த ஆடையுடன் தற்போது போட்டோஷுட்டை எடுத்துள்ளார் கீர்த்தி. தன்னை கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும்வகையில் அதே உடையில் போட்டோஷுட்டை எடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழில் விரைவில் இவரது நடிப்பில் மாமன்னன் படம் ரிலீசாகவுள்ள நிலையில், சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











