கீர்த்தி சுரேஷா இது? லோ நெக் ஜாக்கெட்.. திக்கு முக்காடி போன ஃபேன்ஸ்!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், சேலையில் இருக்கும் அழகான க்யூட் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்களைப் பார்த்த பேன்ஸ் உருகி உருகி கவிதை பாடி வருகின்றனர்.

ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் கதாநாயகியாகிய அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தன.

Actress Keerthy Suresh photos trending on social media

கீர்த்தி சுரேஷின் அம்மாவும் தமிழ் நடிகை என்பதால் இவருக்கு தமிழ் சரளமாக வந்தது. இதனால், ஏராளமான தமிழ் இயக்குநர்களின் பர்ஸ்ட் சாய்ஸாக கீர்த்தி சுரேஷ் இருந்தார். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2 என பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.

Actress Keerthy Suresh photos trending on social media

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் செட் ஆக மாட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பலரும் பேசிய நிலையில், அனைவரின் வாயையும் தனது அபாரமான நடிப்பின் மூலம் அடைத்தார். அந்தப் படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து இருந்தார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது.

Actress Keerthy Suresh photos trending on social media

மாமன்னன் படத்தில்: இதையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்தார். இதையடுத்து, அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக புரட்சி பெண்ணாக நடித்திருந்தார். அந்த படம் மகத்தான வெற்றியை பெற்று கணிசமான வசூலை அள்ளியது.

Actress Keerthy Suresh photos trending on social media

பேபி ஜான்: நடிகை கீர்த்தி சுரேஷ், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார். விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவாண் நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடிக்கின்றனர். இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிற இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கீர்த்தி சுரேஷ் மும்பையில் முகாமிட்டுள்ளார்.

Actress Keerthy Suresh photos trending on social media

கீர்த்தி சுரேஷா இது?: தற்போது, கீர்த்தி சுரேஷ், லோநெக் ஜாக்கெட் அணிந்து கொண்டு கவர்ச்சியாக சேலை கட்டி முன்னழகை படு கிளாமராக காட்டி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ் , அட நம்ம கீர்த்தி சுரேஷா இது? இப்படி கிளாமர் காட்டுறாங்களே என திகைத்து போய் அவரது அழகை வர்ணித்து விதவிதமாய் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X