பிங்க் சேலையில் பார்க்க பார்க்க தீராத அழகு… கீர்த்தி சுரேசை வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை : விருது மழைகளால் நனைந்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகமாக ட்விட் செய்யப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் பெயர்களில் முதலிடத்தில் உள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பட்டையைக் கிளப்பி வரும் கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் வெளியிடும் ஒவ்வொரு போட்டோக்களுக்கும் சில்லறையை சிதறவிட்டுள்ளது. இவர், அம்சமாக பிங்க் சேலையில் கொள்ளை அழகில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை பார்த்து வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என வழிந்து வருகின்றனர்.

தேசிய விருது
தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

ஜாக்பாட் அடித்தது
மகாநடி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்க்கு ஜாக்பாட் அடித்தது போல அதே போன்ற கதைகளில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறதாம்.

ரஜினிகாந்த்
அதிரடியாக தொடங்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு கொரானா சூழல் காரணமாக பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் பரபரப்புடன் தொடங்க அதில் நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,கீர்த்தி சுரேஷ் என பலரும் கலந்து கொண்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில் தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட்லக் சகி மற்றும் ரங் தே திரைப்படங்கள் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.

வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
எந்த உடையாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது பிங்க் கலர் சேலையில் ஸ்லீவ்லஸ் சட்டையுடன் தளும்ப தளும்ப கட்டிக்கொண்டு பார்க்கவே அம்சமாக கொள்ளை அழகில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் பலரும் கொள்ளை அழகுடன் இருக்கும் இந்த தேவதையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என வழிந்து வர இப்பொழுது இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











