கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு... எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: இயக்குனர் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சென்ட்ராயன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்து வந்த, நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாய இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த சுமாரான திரைப்படமாக இருந்தாலும், கீர்த்தி சுரேஷின் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. இதையடுத்து, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பொன்ராம் இயக்கத்தில் வெளியான ரஜினி முருகன் படம் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் கீர்த்தி சுரேஷ்க்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

Actress Keerthy suresh Revolver Rita shooting Wrapped up

திறமையான நடிகை: அந்த படத்தை தொடர்ந்து ரோமியோ, சீமராஜா படத்தில் சுரேஷ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு மிகபெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது மட்டுமில்லாமல், அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்துக்கு தங்கச்சியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட்டில் : இந்த ஆண்டு ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்த சைரன் 108 திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்ததாக அட்லி தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் ஹீரோயினாக நடித்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரிவால்வர் ரீட்டா: இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த ரிவால்வர் ரீட்டா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சந்துரு இயக்கும் உ ருவாகி உள்ள இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சென்ட்ராயன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை பணிகளை கவனித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரிவால்வர் ரீட்டா படத்தின் செட்டில் கடைசி நாள் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X