Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
க்ளீன் போல்ட்... வேற ரேஞ்சில் வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ
சென்னை : 2000 ஆம் ஆண்டு மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயின் ஆனார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் டாப் நடிகையாக கலக்கி வருகிறார்.
கவிஞர் சினேகனுக்கு திருமணம்… பொண்ணு நடிகையாமே… யார் அந்த நடிகை !
ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மகாநடி, சீமராஜா, சண்டக்கோழி 2, சர்கார் என வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார். மகாநடி படத்தில் நடிகை சாவித்திரி கேரக்டரில் நடித்து, தேசிய விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.
டாப் ஹீரோக்களுக்கு ஜோடி
விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், விஷால் என டாப் ஹீரோக்கள் பலருடன் இணைந்து நடித்து, ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். அடிக்கடி கிளாமராக போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திண்டாட வைத்து வருகிறார்.
Recommended Video
கொரோனாவிலும் ரிலீசான படங்கள்
தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த, செல்வராகவன் நடிக்கும் சாணி காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கொரோனாவால் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையிலும் கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களில் ஓடிடி.,யில் ரிலீஸ் ஆகின.
கிரிக்கெட் விளையாடிய கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மொட்டை மாடியில் கிரிக்கெட் பவுலிங் போடும் கீர்த்தி சுரேஷ், ஸ்டெம்ப்களை க்ளீன் போல்ட் செய்துள்ளார். அருகில் தனது செல்ல நாய்க்குட்டி அம்பயராக நின்று வேடிக்கை பார்ப்பது போல் உள்ளது
என்னது இவ்வளவு லைக்குகளா
இந்த வீடியோ செமையாக வைரலாகி வருகிறது. இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. இதில் புதிய படத்திற்காக பயிற்சி எடுக்கிறீர்களா என கேட்டுள்ளனர்.
விளையாட்டு படத்தில் நடிக்கிறாரா
பெண்கள் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க போகிறார். அதனால் தான் கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார் என மேலும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர்.