முத்தக்காட்சிக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கை நழுவிப்போன பெரிய நடிகரின் படம்!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.நடிகையர் திலகம் திரைப்படத்தை தொடர்ந்து சிறந்த கதைக்களம் கொண்ட திரைப்படங்களுக்கு, முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ், பெரிய நடிகரின் படத்தில் முத்தக்காட்சி இருந்ததால், அந்த படத்திற்கு நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் ஒரு போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அந்த படம் உதயநிதி ஸ்டாலினின் சினிமா பயணத்தில் கடைசி படம் என்பதால், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது.

actress Keerthy Suresh Says No to kissing scene in telugu movie

அந்த படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், சைரன் படத்தில் காவல்துறை அதிகாரியாக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால், சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷூக்கு அந்த போலீஸ் கதாபாரத்திரம் எடுபடவில்லை என படம் பார்த்த இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

முத்தக்காட்சிக்கு நோ: இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில் அந்த படத்தில் முத்தக்காட்சி மற்றும் படுக்கை அறை காட்சி இருந்ததால் அந்த கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டாராம். முத்தக்காட்சி இல்லையென்றால் ஒகே என்று கீர்த்தி சுரேஷ் நிபந்தனை விதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள மறுத்த படக்குழு, படத்திற்கு அந்த முத்தக்காட்சி மிகவும் முக்கியம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

கை நழுவிப்போன படவாய்ப்பு: ஆனால், இதை கீர்த்தி சுரேஷ், ஏற்க மறுத்து, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டாராம். இதனால், ஒரு பெரிய நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கை நழுவிப்போய் உள்ளது. இதை தெலுங்கு திரையுலகினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஏனெனில் அந்த நடிகருடன் நடிக்க பல நடிகைகள் வரிசை கட்டி காத்திருக்கும் நிலையில், கோடிக்கணக்கில் சம்பளம் பேசியும் கீர்த்தி சுரேஷ் நோ சொல்லி உள்ளார்.

தெறி இந்தி ரீ மேக்: தற்போது, கீர்த்தி சுரேஷ், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி இந்தியில் ரீமேக்கில் நடித்து வருகிறார். விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடிக்கின்றனர். சினிஒன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிற இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கீர்த்தி சுரேஷ் மும்பையில் முகாமிட்டுள்ளார்.

இது என்ன மாயம்: மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர், 2015ஆம் ஆண்டு 'இது என்ன மாயம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் அமைதியான ஹீரோயினாக வந்த இவரை பலருக்கும் பிடித்திருந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து தேசிய விருதை பெற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X