சிகப்பு உடையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

சென்னை : முன்னணி கதாநாயகியாக இருக்கும்போதே ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அண்ணாத்த வெற்றியை தொடர்ந்து இப்பொழுது சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ சங்கர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்

தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது சிகப்பு நிற உடையில் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது.

மூன்று மொழிகளிலும்

மூன்று மொழிகளிலும்

சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு நடித்த ரஜினி முருகன் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் மூலம் பிரபலம் அடைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் இப்பொழுது தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மலையாளம், தமிழ்,தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இவர் நடிக்கும் பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன. கதாநாயகியாக நடிக்கும் அதேசமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

மகாநடி

மகாநடி

அந்த வகையில் முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்த மகாநடி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு கீர்த்தி சுரேஷுக்கு மிகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது. மகாநடி வெற்றியை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்ட கீர்த்தி சுரேஷ் பெண் குயின்,மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்பொழுது குட்லக் சகி மற்றும் வாஷி உள்ளிட்ட படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்து வருகிறார்

தங்கை கதாபாத்திரங்களில்

தங்கை கதாபாத்திரங்களில்

பொதுவாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பல ஹீரோயின்களும் தங்கை வேடங்களில் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள் ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடித்து இருப்பார் . கமர்சியல் ரீதியாக அண்ணாத்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கிலும் பிரபல முன்னணி நடிகர் சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறார். போலோ சங்கர் தமிழில் அஜித் நடிப்பில் பிரமாண்ட வெற்றிபெற்ற வேதாளம் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது

சிகப்பு உடையில் ஜொலிக்கும்

சிகப்பு உடையில் ஜொலிக்கும்

ராக்கி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் சாணிக்காயிதம் என்ற படத்தில் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் வழிப்பறிக் கொள்ளையர்களாக நடிக்கின்றனர் என கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிற கீர்த்தி சுரேஷ் இப்பொழுது சிவப்பு உடையில் ஜொலிக்கும் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X