Keerthy Suresh: வயநாடு கொடூரம்.. தாங்க முடியாமல் கண்கலங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்!
சென்னை: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் நிதியுதவி அளித்து வரும் நிலையில், இந்த கொடூர சம்பவம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் கண்கலங்கி பேசி உள்ளார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் பெய்த தொடர்மழை காரணமாக சூரல்மலை, முண்டக்கை, பூஞ்சிரிமட்டம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த மலைக்கிராமங்கள் முற்றிலும் மண்ணில் புதைந்த நிலையில், பலி எண்ணிக்கை 400 கடந்தது. மூன்று கிராமங்களும் முற்றிலுமாக உருக்குலைந்த நிலையில், நிலச்சரிவில் சுமார் 400 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

பிரபலங்கள் உதவி: இந்த பகுதியில் பல நாட்கள் தேடுதல் பொதுமக்கள், ராணுவ விரர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்களும் நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் தனுஷ் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
வயநாடு கொடூரம்: இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், ரகு தாத்தா திரைப்படத்தின் ப்ரோமோஷனில், வயநாடு கொடூரம் குறித்து பேசி உள்ளார். இயற்கையின் சீற்றத்தை என்ன சொல்வது என்றே தெரியவில்லை, அதே போலத்தான் தமிழ்நாட்டில் வெள்ளம் ஏற்பட்டு பல பேர் இறந்தார்கள் அதற்கு என்னால் ஏதோ ஒரு உதவி செய்ய முடிந்தது. ஆனால், இந்த முறை நான் இங்கே இருக்கிறேன். வயநாடு மிகவும் அழகான ஊர் இந்த ஊர் முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதைப்பார்க்கும் போது சொல்வதற்கே வார்த்தை இல்லை என்று கண்கலங்கி பேசினார். இதையடுத்து, வயநாடு நிலச்சரிவு சம்பவத்திற்கு தானாக முன்வந்து, தங்களது குழந்தைகளின் படிப்பு செலவிற்காக வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, வயநாடு மக்களுக்கு தேவையான உதவி செய்த தம்பதிகளுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.
ரகு தாத்தா: இப்படத்தை கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள படம் 'ரகு தாத்தா'. பெரும் வரவேற்பை பெற்ற 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார். இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











