மிருகம்போல வளைந்து நெளிந்து.. வித்தியாசமான உடற்பயிற்சி செய்த கீர்த்தி சுரேஷ்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் மிருகம்போல வளைந்து நெளிந்து வித்தியாசமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
சமீபகாலமாக இவருடைய நடிப்பில் வெளியான எந்த படமும் வெற்றி பெறாததால்,அடுத்து எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்
மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க வந்தார் கீர்த்தி சுரேஷ். அதன் பின் அச்சநேயனெனிக்கிஷ்டம், குபேரன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் ஓரளவிற்கு சுமாராக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

டாப் நடிகர்களுடன்
அதைத் தொடர்ந்து, தனுஷுடன் இணைந்து தொடரி படத்தில் மலையாள பெண்ணாகவே நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ,விஜய்யுடன் சர்க்கார் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். அந்த படம் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுத்தந்தது.

லீட் ரோலில்
கீர்த்தி சுரேஷ், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்த சாணிக்காயிதம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ரத்தம், வெறி, அரிவாள் வெட்டி என, ரத்தவாடை வீசிய இந்த படத்தில் செல்வராகவனுடன், பழி தீர்த்துக்கொள்ளும் பெண்ணாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தசரா படத்தில்
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நானி நடித்துள்ள தசரா படத்தில் நடித்துள்ளார். இதில், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படம் மார்ச் 30ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது . மேலும், ரிவால்வர் ரீட்டா படத்திலும், மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.

வித்தியாசமான உடற்பயிசி
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், மிருகங்களைப் போல இடையை வளைந்து நெளிந்து வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்துள்ளார். மேலும், அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக இயற்கையோடு ஒன்றாக மாறி மிருகம் போன்ற செயல்பாடுகனை முதன்முறையாக செய்து இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

காதல் கிசுகிசு
நடிகை கீர்த்தி சுரேஷுடன் ரெஸ்டாரான்ட் உரிமையாளரும், பள்ளித் தோழருமான ஒருவரை கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசு பரவியது. இணையத்தில் பரவும் இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இது வதந்தி என்றும் கீர்த்தி சுரேஷின் அம்மா விளக்கம் கொடுத்திருந்தார்.


Click it and Unblock the Notifications











