செல்ல நாயுடன் விமானத்தில் பறந்த நடிகை.. பணம் இருந்தா இப்படியா? எல்லாம் காலக்கொடுமை கதிரவா!

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணியுடன் விமானத்தில் பயணம் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் திறமையான நாயகி என்கிற அங்கீகாரத்தை குறுகிய காலத்தில் பெற்றுவிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்

2015ம் ஆண்டு, விஜய் இயக்கத்தில் வெளியான 'இது என்ன மாயம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தைக் கொடுத்தார் கீர்த்தி சுரேஷ். இத்திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

அழகான கண்கள்..தமிழ் சினிமாவுக்கு ஏற்ற லட்சணமான முகம்.. பார்த்தவர்கள் அனைவரும் யாருடா இந்த பெண்ணு என்று கேட்கும் அளவுக்கு முதல் படத்திலேய கல்லூரி மாணவியாக வந்து முத்திரையைப்பதித்து விட்டார் கீர்த்தி சுரேஷ். பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷுடன் 'தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

தேசிய விருதை வென்றார்

தேசிய விருதை வென்றார்

சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத்திரைப்படமான 'மஹாநடி' திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திற்காக இவரை தேர்வு செய்த போது பலர் சாவித்திரியின் கதாபாத்திரத்திற்கு இவர் தகுதியானவர் இல்லை என ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. அனைத்து விமர்சனங்களுக்கும் அமைதியாக இருந்த கீர்த்தி சுரேஷ், அந்த திரைப்படத்திற்காக தேசியவிருதை வாங்கி அனைவரின் வாயையும் அடைத்தார்.

மிரட்டலான வசனம்

மிரட்டலான வசனம்

தற்போது கீர்த்தி சுரேஷ், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான சாணிக்காயிதம் திரைப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து இவர் நடித்திருந்தார். அந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பும் மிரட்டலாக இருந்தது. சைகோ கொலைகாரியை போல துண்டு..துண்டா வெட்டவேண்டும் என்று அவர் பேசிய வசனம் உண்மையிலேயே வயிற்றில் புளியை கரைக்கும்படி இருக்கும்.

Recommended Video

Yuvan Shankar Raja விட்டு கொடுக்கவே இல்ல | Gayathri-Maamanithan Press Meet | *Kollywood
எல்லாம் காலக்கொடுமை

எல்லாம் காலக்கொடுமை

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணி நாயை தனி விமானத்தில் வைத்து கூட்டி கொண்டு ஊர் சுற்றியிருக்கிறார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வரும் நேரத்தில், இணையவாசிகள் பலர் பணம் கோடிக்கணக்கில் கொட்டி இருந்த இப்படித்தான் செய்ய தோன்றும என்றும், எல்லாம் காலக்கொடுமை கதிரவா என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X