பச்சை நிறமே பச்சை நிறமே... பச்சை சேலையில் வெட்கத்தை கொட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ்
சென்னை: அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் போலோ சங்கர் திரைப்படத்திலும் கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது தனது அப்பாவின் சொந்த தயாரிப்பில் வாஷி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்பொழுது பச்சை சேலையில் வெட்கத்தை கொட்டும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.

மார்க்கெட் இழந்து விடும்
பொதுவாக நடிகைகள் பலரும் முன்னணி நடிகையாக இருக்கும்போது தங்கையாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதையும் மீறி நடித்தால் தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க அழைப்பார்கள் மற்றும் மார்க்கெட்டும் இழந்து விடும் என நினைத்து கொண்டு முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும் சற்று யோசிப்பார்கள் ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப் படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்து பட்டைய கிளப்பி இருந்தார்.

அண்ணன் தங்கை சென்டிமென்ட்
வீரம், விவேகம், விஸ்வாசம்,வேதாளம் என அஜித்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வந்த சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியானது. ரஜினிகாந்த் அண்ணனாகவும் கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருந்தார். அண்ணன் தங்கை சென்டிமென்ட் இந்த படத்தில் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்க அண்ணாத்த சுமார் 250 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது

மீண்டும் தங்கையாக
அண்ணாத்த வெற்றி குஷியில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் அதை தொடர்ந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆம் தமிழில் அஜீத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற வேதாளம் திரைப்படம் தெலுங்கில் போலோ சங்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

பச்சை சேலையில் பளபளக்க
மகாநடி, பெண் குயின் ,மிஸ் இந்தியா படங்களைத் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் வாஷி என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படம் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமார் தயாரிப்பில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இவ்வாறு பரபரப்பாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது பச்சை சேலையில் பளபளக்க வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பச்சை நிறமே பச்சை நிறமே என பாடல் பாடி வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











