Keerthy suresh: அடுப்பை சிம்முல வைம்மா.. ஐ அம் ஆன் தி வே.. ரிவால்வர் ரீட்டா பட டீசர்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் தமிழில் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கிலும் இவரது மகாநடி படம் மிகச் சிறப்பாக அமைந்து இவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்த்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் படங்களை தயாரித்தும் வருகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்த ரகு தாத்தா படம் சொதப்பிய நிலையில் அடுத்ததாக ஹீரோயினை மையமாக வைத்து ரிவால்வர் ரீட்டா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. மாஸாக உருவாகியுள்ளது இந்த டீசர்.

நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்திப் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தமிழில் விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்தியிலும் இவரது அடுத்த படம் ரிலீசாகவுள்ளது. தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரிவால்வர் ரீட்டா படம்: தமிழில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் ரகு தாத்தா படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஹீரோயினை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. படம் நல்ல மெசேஜுடன் எடுக்கப்பட்டிருந்த போதிலும் படத்தின் கதைக்களம் மற்றும் காட்சி அமைப்புகள் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. இந்நிலையில் அடுத்ததாக கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் இன்றைய தினம் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் தனக்கு சிறப்பான வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
ரிவால்வர் ரீட்டா பட டீசர்: இந்நிலையில் இந்த படத்தின் டீசர் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் கைப்பையை திருடர்கள் காரில் பிடுங்கிக் கொண்டு போகின்றனர். அவர்களிடத்திற்கு சென்று அதை திறந்து உள்ளே பார்க்கும் அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அதில் துப்பாக்கி, ரத்தக்கறையுடன் கத்தி மற்றும் வெடிகுண்டு ஆகியவற்றை பார்க்கும் அவர்கள் அதிர்ச்சியுடன் இருக்கும் நிலையில், அங்கே மற்றொரு அடியாளை அடித்து விட்டு உள்ளே வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவரிடம் அடுத்தடுத்த கேள்விகளை கேட்கும் ரவுடிகள் அவர் என்ன டானா என்று கேட்கிறார்கள், அதற்கு அவர் நானா என்று ரைமிங்காக பதிலளிக்கிறார்.
ரிவால்வர் ரீட்டாவாக கீர்த்தி சுரேஷ்: இதனிடையே தன்னுடைய பேக்கை திரும்ப வாங்கும் கீர்த்தி சுரேஷ்க்கு அவருடைய அம்மாவாக நடித்துள்ள ராதிகாவிடமிருந்து கால் வருகிறது. அதை அட்டென்ட் செய்யும் கீர்த்தி சுரேஷிடம் ராதிகா வெங்காயம் வதக்கி கொண்டிருப்பதாகவும் தக்காளி வேண்டும் என்றும் கேட்க ஐந்து நிமிடத்தில் தான் அங்கே வருவதாக கீர்த்தி சுரேஷ் கூறுவதாக இந்த டீசரில் காணப்படுகிறது. தன்னுடைய அம்மாவிற்கு செல்ல மகளாகவும் அதே நேரத்தில் ரிவால்வரை வைத்து பல வேலைகளில் செய்யும் ரீட்டாவாகவும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. படத்தில் அவரது கெட்டப் இயல்பாக அமைந்துள்ள நிலையில் படம் ரசிகர்களை கண்டிப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











