ஐஸ்வர்யா எது செய்தாலும், அது சரியாகத்தான் இருக்கும்… குஷ்பு என்ன சொல்ல வராங்க !

சென்னை : ஐஸ்வர்யா எது பண்ணாலும் சரியாகத்தான் இருக்கும் என்று அவரை புகழ்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஐஸ்வர்யா சமீபத்தில் முசாஃபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்கியுள்ளார்.

தனுஷ்,ஐஸ்வர்யா பிரிவு

தனுஷ்,ஐஸ்வர்யா பிரிவு

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருடங்கள் மண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஜனவரி 17 அன்று அறிவித்தனர். இருவரும் தங்களை தனி நபர்களாக புரிந்து கொள்ள நேரம் எடுப்பதால் தனியுரிமை கோரினர். இவர்களின் அறிவிப்பு அவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார்.

மியூசிக் ஆல்பம்

மியூசிக் ஆல்பம்

விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேலைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன் பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் முசாபிர் ஆல்பம் பாடல் தயாரிக்கும் தனது பணியில் மீண்டும் இறங்கினார். ஆனால், மீண்டும் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் முசாபிர் பாடல் தாமதமாகி தற்போது டீசர் மட்டுமே வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யாவை புகழ்ந்த குஷ்பு

ஐஸ்வர்யாவை புகழ்ந்த குஷ்பு

இந்நிலையில் நடிகை குஷ்பு ஐஸ்வர்யாவின் முசாஃபிர் பாடலுக்கு வாழ்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த பெயரை கேட்டதும் நம் மனதிற்கு பல விஷயங்கள் தோன்றும். இதில் ரொம்ப அழகான விஷயம் என்னன்னா, ஒரு பெண், இயக்குநர், டான்சர், தாய், மிகப்பெரிய தந்தையின் மகள். ஆனால், எல்லாத்தையும் தாண்டி, சுயமாக சிந்திக்கக்கூடிய பெண்.

பெண்களுக்கு ஓர் முன் உதாரணம்

பெண்களுக்கு ஓர் முன் உதாரணம்

ஐஸ்வர்யா எது பண்ணாலும், அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகத்தான் பண்ணுவாங்க, அனைத்து பெண்களுக்கும் ஒரு முன் உதாரணமா இருந்து இருக்காங்க, முசாஃபிர் ஆல்பத்தின் டீசரை பார்க்கும் போது 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேமரா முன் வந்து இருக்காங்க. இந்த பயணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X