உங்களை கல்யாணம் பண்ணிக்கணும் என கேட்ட ரசிகர்.. நடிகை குஷ்பு சொன்ன குசும்பு பதிலை பாருங்க!

சென்னை: சிம்பு ஒரு பக்கம், பிரபு ஒரு பக்கம் உடல் எடையை குறைத்து வருகிறார்கள் என்றால், இன்னொரு பக்கம் நடிகை குஷ்பு உடல் எடையை மொத்தமாக குறைத்து எப்படி சினிமாவுக்கு வந்தாங்களோ அதே போலவே மாறி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ஏகப்பட்ட பிரபலங்கள் வாய் பிளந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபலங்களே இப்படியென்றால் ரசிகர்கள் சும்மா விடுவார்களா? ஒரு ரசிகர் உங்களை திருமணம் பண்ணிக்கலாமா? என்று கேட்க அதற்கு செம குசும்பாக நடிகை குஷ்பு அளித்துள்ள பதில் தான் வேற லெவல்.

குச்சி ஐஸ் போல

குச்சி ஐஸ் போல

நல்லா புசு புசுன்னு குல்பி ஐஸ் போல இருந்த நடிகை குஷ்பு, திடீரென ஆளே கரைந்து போய் குச்சி ஐஸ் போல மாறி விட்டார். கடின உடற்பயிற்சி காரணமாக மீண்டும் 80ஸ் கனவு நாயகி தோற்றத்திற்கு மாறியுள்ள நடிகை குஷ்புவை பார்த்து ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர்.

வாய் பிளந்த பிரேம்ஜி

வாய் பிளந்த பிரேம்ஜி

நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த நடிகர் பிரேம்ஜி நம்பவே முடியாமல் வாய் பிளந்து பார்க்கும் ஹாலிவுட் பட ஜிஃப் இமேஜை பதிவிட்டு தனது ரியாக்‌ஷனை வெளிப்படுத்த நடிகை குஷ்புவின் ஸ்லிம் போட்டோவுக்கு கீழே ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

விஜே அஞ்சனா

விஜே அஞ்சனா

ஏகப்பட்ட பிரபலங்கள் நடிகை குஷ்புவின் இந்த திடீர் மாற்றத்தை பார்த்து ஷாக் ஆகிப் போயுள்ள நிலையில், விஜே அஞ்சனா இந்த போட்டோக்களை பார்த்து "ஓ மை பியூட்டி" என கமெண்ட் செய்ய.. நடிகை குஷ்புவும் "தேங்க்ஸ் மை டியர்" என ரிப்ளை போட்டுள்ளார்.

ஐ வான்ட் டு மேரி யூ

ஐ வான்ட் டு மேரி யூ

இந்நிலையில், ரசிகர் ஒருவர் "ஐ வான்ட் டு மேரி யூ மேடம்" என்றே ஒரு கமெண்ட் போட அந்த கமெண்ட்டை பார்த்து அப்படியே கடந்து போகாமல் அதற்கு நடிகை குஷ்பு போட்டுள்ள பதில் தான் சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.

21 வருஷம் லேட் ஆகிடுச்சே

21 வருஷம் லேட் ஆகிடுச்சே

நீங்க ஒரு 21 வருஷம் லேட்டா வந்து இப்படியொரு கேள்வி கேட்டு இருக்கீங்க.. ரொம்ப ஸாரி. ஆனாலும், கவலைப்படாதீங்க என் கணவரிடம் ஒரு வார்த்தை இதைப் பற்றி பேசி விட்டு சொல்கிறேன் என கமெண்ட் போட்டு தனது குசும்புத்தனமும் குழந்தைத் தனமும் இன்னமும் அப்படியே உள்ளதை நிரூபித்துள்ளார் நடிகை குஷ்பு.

நான் கூட நைஸுங்க

நான் கூட நைஸுங்க

ரசிகர் ஒருவருக்கு நடிகை குஷ்பு இப்படியொரு பதிலை போட்டதை பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர். சில ரசிகர்கள் "நான் கூட நைஸுங்க" என நடிகை குஷ்புவிடம் இருந்து மேலும், கமெண்ட்டுகளை வாங்க ஏகப்பட்ட ட்வீட்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

இயக்குநர் சீனு ராமசாமி

இயக்குநர் சீனு ராமசாமி

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற படங்களை இயக்கி உள்ள இயக்குநர் சீனு ராமசாமி நடிகை குஷ்புவின் இந்த லேட்டஸ்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படங்களை பார்த்ததும் "மிராக்கி்ள்.. கீப் இட் அப் ஜி" என்று கமெண்ட் செய்துள்ளார்.

Recommended Video

CHUBBY யாதான் சாதிச்சோம் | REWIND RAJA EP-03 | FILMIBEAT TAMIL
எந்த வித்தியாசமும் இல்லை

எந்த வித்தியாசமும் இல்லை

இந்த இரண்டு படங்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என நடிகை குஷ்பு சினிமாவில் என்ட்ரியான புதிதில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், அண்ணாத்த படத்தின் அப்டேட் கேட்டும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X