என்னோட அழகு தேவதை.. என் அழகான தோழி.. ரம்யா கிருஷ்ணனை ரசித்து வாழ்த்திய குஷ்பு!

சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணனை வர்ணித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் நடிகை குஷ்பு.

நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தமிழ் சினிமாவில் இரு நடிகைகளும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள நிலையில், ரம்யா கிருஷ்ணனுக்கு சூப்பராக இப்படியொரு வாழ்த்து ட்வீட்டை நடிகை குஷ்பு போட்டிருப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.

ரம்யா கிருஷ்ணன் பிறந்தநாள்

ரம்யா கிருஷ்ணன் பிறந்தநாள்

சென்னையில் 1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி பிறந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரபல நகைச்சுவை நடிகர் சோ ராமசுவாமியின் உறவினர் தான் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. பரதநாட்டியம், குச்சிபுடி போன்ற பாரம்பரிய நடனக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர் ரம்யா கிருஷ்ணன்.

நீலாம்பரி டு ராஜமாதா

நீலாம்பரி டு ராஜமாதா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து மிகப்பெரிய புகழ் அடைந்த ரம்யா கிருஷ்ணன் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்து உலகளவில் பிரபலமானார்.

அம்மன் அவதாரம்

அம்மன் அவதாரம்

மறைந்த நடிகை செளந்தர்யா நடிப்பில் வெளியான அம்மன் படத்தில் அம்மனாக நடித்த ரம்யா கிருஷ்ணன் ராஜ காளியம்மன், ராஜேஷ்வரி உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து அம்மன் வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அம்மனாகவே ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார்.

குவிகிறது வாழ்த்து

குவிகிறது வாழ்த்து

நடிகை ரம்யா கிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரம்யா கிருஷ்ணன் நடித்த படங்களின் போட்டோக்களையும் ஷேர் செய்து வாழ்த்தி வருகின்றனர்.

என்னோட அழகு தேவதை

என்னோட அழகு தேவதை

நடிகை குஷ்புவே இப்பவும் சூப்பர் ஸ்லிம்மாகி அழகு தேவதையாக ரசிகர்களுக்கு காட்சியளித்து வரும் நிலையில், "என்னோட அழகு தேவதை.. என் அழகான தோழி.. ஹாப்பி பர்த்டே டார்லிங்.. லவ் யூ டி ராஜமாதா" என ரம்யா கிருஷ்ணனை ரசித்து வர்ணித்து போட்டுள்ள வாழ்த்து ட்வீட் வைரலாகி வருகிறது.

வாசுவுக்கும் வாழ்த்து

வாசுவுக்கும் வாழ்த்து

இயக்குநர் பி. வாசுவும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரம்யா கிருஷ்ணனை போல இயக்குநர் பி. வாசுவுக்கும் இன்று தான் பிறந்தநாள். நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் "என்னோட ஃபேவரைட், என்னுடைய குரு, என்னோட பெஸ்ட் ஃபிரண்ட் இயக்குநர் பி. வாசுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்றும் வாழ்த்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X