Khushi kapoor: அம்மா உடையை அணிந்துவந்து அசத்தல்.. ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ரீதேவி மகள்!

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர். இவர்கள் இருவரும் தற்போது படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர்.

ஜான்வி கபூர் கடந்த சில ஆண்டுகளாகவே நடித்து வருகிறார். தற்போது தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடி சேர்ந்துள்ளார்.

 Actress Khushi kapoors new photoshoot picutres makes everyone interesting

இந்நிலையில் ஸ்ரீதேவி -போனிகபூரின் இளைய மகள் குஷி கபூரும் தற்போது படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி: மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தொடர்ந்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவர், முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இறப்பதற்கு முன்னதாக நடிகர் விஜய்யின் புலி படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஸ்ரீதேவி மகள்கள்: இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் அவர் துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் தற்போது பாலிவுட்டில் நடிகைகளாக இருந்து வருகின்றனர். ஜான்வி கபூர் ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோதே ஜான்வி கபூர் நடிகையாகிவிட்டார். பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட கோலமாவு கோகிலா படத்திலும் இவர் நடித்திருந்தார்.

நடிகை ஜான்வி கபூர்: படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் அதீத கவர்ச்சியுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஸ்ரீதேவி -போனிகபூரின் இளையமகள் குஷி கபூரும் தற்போது படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். பாலிவுட்டில் The Archies என்ற படத்தில் இவர் அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ நடந்த நிலையில் அதில் குஷிகபூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தி ஆர்ச்சிஸ் படத்தில் குஷி கபூர்: இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷி கபூர், தன்னுடைய அம்மாவின் உடையை அணிந்து வந்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், மறைந்த ஸ்ரீதேவியை ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர். இந்தப் புகைப்படங்கள் குஷி கபூருக்கு அதிகமான பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் இந்த உடையை ஸ்ரீதேவி நிகழ்ச்சி ஒன்றில் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அம்மா உடையில் குஷி கபூர்: இந்த உடையில் போட்டோஷுட்டையும் எடுத்துள்ள குஷிகபூர், சமூக வலைதளப் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார். மேலும் ஸ்ரீதேவி இந்த உடையில் உள்ள புகைப்படமும் இந்தப் புகைப்படங்களுடன் இணைந்து சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. காமெடி களத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் குஷி கபூருக்கு மிகச்சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் குறித்து சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X