என்னை பற்றி தவறான வீடியோக்கள் பரவுகின்றன.. காவல் துறையில் கிரண் கொடுத்த பரபரப்பு புகார்

சென்னை: ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கான பட வாய்ப்புகள் சட்டென்று குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆள் காணாமல் போய்விட்டார். இதனையடுத்து ஆம்பள உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். இந்நிலையில் காவல் துறையில் அவர் புகார் அளித்திருக்கிறார்

வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைதான் கிரண் ரத்தோட். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்தவர் தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். சரண் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. சரண் இயக்கியிருந்த அந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏவிஎம் தயாரிப்பில் சில வருடங்கள் படங்கள் எதுவும் வராமல் இருந்த சூழலில் ஜெமினி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள்: பக்கா ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவான ஜெமினி அதிரிபுதிரி ஹிட்டடித்தது. முதல் படமே மெகா ஹிட்டானதால் அறிமுகமாகியிருந்த கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதனை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார். இருந்தாலும் கிரண் ஒரு கிளாமர் ஹீரோயின் என்ற முத்திரை மட்டும் அவரை விட்டு விலகாமல் இருந்தது. அதை மாற்றுவதற்கு ஒரு படத்துக்காக காத்திருந்தார் கிரண்.

Actress Kiran has filed a complaint against inappropriate videos being circulated about her

அன்பே சிவம்: அப்படிப்பட்ட சூழலில்தான் சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான அன்பே சிவம் திரைப்படம். இன்றுவரை கல்ட் க்ளாசிக் படமாக அன்பே சிவம் கொண்டாடப்படுகிறது. அப்படத்தில் கிரண் கமிட்டானதும் அக்காலகட்டத்தில் பலரும் ஆச்சரியம்தான் பட்டனர். ஆனால் நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதுபோல் தனது நடிப்பில் அதகளம் செய்திருந்தார் கிரண். தொடர்ந்து அஜித்துடன் வில்லன், பிரசாந்த்துடன் வின்னர் படங்களில் நடித்த அவருக்கு மார்க்கெட் சட்டென சரிந்தது.

ஓரங்கட்டப்பட்ட கிரண்: மார்க்கெட் சரிந்ததை அடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் திருமலையில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன் பிறகு முழுவதுமாக ஒதுங்கியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார். இப்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் அவர்; ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்துவருகிறார். அந்த ஆப்பும் ஒரு விவகாரமான ஆப் என்றே பலராலும் கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட விஷயங்களுக்காக அவர் பணம் வசூலிப்பதாகவும் ஒரு தகவல் ஓடியது.

கிரண் அளித்த புகார்: இந்நிலையில் நடிகை கிரண் காவல் துறையில் ஒரு புகாரை அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், தன்னை தவறாக சித்தரித்து மார்ஃபிங்க் செய்து போலியான ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் பரவிவருகிறது. அந்த வீடியோவை டவுன்லோட் மற்றும் ஷேர் செய்பவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப் புகாரை பெற்றுக்கொண்ட சைபர் க்ரைம் காவல் துறையினர் ஆபாச வீடியோக்களை பரப்பும் கும்பலை தேட தொடங்கியிருக்கிறார்கள்.

அதிகரிக்கும் வீடியோக்கள்: முன்னதாக ஏஐ தொழில்நுட்பம் அதிகம் வளர தொடங்கியதை அடுத்து பல நடிகைகள் தொடர்பாக தவறான வீடியோக்களை உருவாக்குவதை ஒரு கும்பல் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பலரும் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த லிஸ்ட்டில் கிரணும் இணைந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X