Kiran: அட நம்புங்கப்பா.. கிரண் தான் இது.. வெட்கத்துக்கே வெட்கம் வரும் போல!
சென்னை: இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை கிரண் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வேலையாக வைத்துள்ளார். தற்போது, இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் கிரணா இது நம்ப முடியலையே என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறினார் நடிகை கிரண். முதல் படத்திலேயே ஜெமினி.. ஜெமினி கவனி கவனி என்று ஆட்டம் போட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த கிரணுக்கு தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் குவிந்தனர். சரண் இயக்கி ஜெமினி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை அள்ளியதால் முதல் படமே கிரணுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

நடிகை கிரண்: ஜெமினி படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய 'அன்பே சிவம்' படத்தில் கமலுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அதன் பின் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வில்லன் படத்திலும், அதன் பின் வின்னர் படத்தில் பிரசாந்த்துடன் ஜோடியாக நடித்திருந்தார். நடிகை கிரண் நடித்த அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்ததால், கிரணுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் கிடைத்தது.
மார்க்கெட்டை இழந்தார்: பெரிய நடிகையாக ஒரு ரவுண்டு வர வேண்டிய நடிகை, காதலில் சிக்கி சினிமா கேரியரை தொலைத்தார். பிரேக் அப்பால் வெளியில் தலைகாட்டாமல் இருந்த கிரண், அதில் இருந்து மீண்டும் நடிக்க வந்தார். ஆனால், இதற்குள் அவரின் மார்க்கெட் போய்விட்டது. பின் வாய்ப்பு தேடி பாலிவுட்,டோலிவுட் அலைந்த அம்மணிக்கு கதாநாயகியாக படவாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், 'திருமலை' படத்தில் 'வாடியம்மா ஜக்கம்மா' என்ற ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் வாய்ப்பு தான். சரி வந்த வாய்ப்பை விட வேண்டாம் என ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டார். அந்த பாடல் வெற்றி பெற்றதால், கிரண் கவர்ச்சி நடிகையாகவே மாறி எஸ்.ஜே சூர்யாவின் 'நியூ' படத்தில் மாமியாக கவர்ச்சி காட்டி நடித்தார்.

கவர்ச்சி நடிகை: இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை கிரண், பணத்திற்காக படுமோசமான கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் கிரண், தற்போது இழுத்து போர்த்திக் கொண்டு புடவையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள், இது கிரணா நம்பவே முடியலையா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











