Kiran - ஆண்களை பார்க்கும்போது எனது கண்கள் அங்கேதான் போகும்.. கிரண் ஓபன் டாக்

சென்னை: நடிகை கிரண் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. கமல் ஹாசனுடன் அன்பே சிவம் படத்திலும் நடித்தார். ஆனால் திடீரென அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

கோலிவுட்டுக்கு மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்துதான் ஹீரோயின்கள் வருவது வழக்கமாகியிருந்தது. ஜோதிகா, சிம்ரன், நமீதா என அந்தப் பட்டியல் நீளும். இப்போதும் மும்பையிலிருந்து குறிப்பிட்டு சொல்லும்படி கதாநாயகிகள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில் வட மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைதான் கிரண் ரத்தோட்.

 Actress Kiran Open talk in Recent interview goes trending

ஜெமினி: பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்தவர் தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். சரண் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. பக்கா ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவான ஜெமினி அதிரிபுதிரி ஹிட்டடித்தது. முதல் படமே மெகா ஹிட்டானதால் அறிமுகமாகியிருந்த கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

அன்பே சிவம்: அவரது கரியரில் முக்கியமான படமாக கருதப்படுவது சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான அன்பே சிவம் திரைப்படம். இன்றுவரை கல்ட் க்ளாசிக் படமாக அன்பே சிவம் கொண்டாடப்படுகிறது. அப்படத்தில் கிரண் கமிட்டானதும் அக்காலகட்டத்தில் பலரும் ஆச்சரியம்தான் பட்டனர். ஆனால் நீங்கள் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை என்பதுபோல் தனது நடிப்பில் அதகளம் செய்திருந்தார் கிரண். தொடர்ந்து அஜித்துடன் வில்லன், பிரசாந்த்துடன் வின்னர் படங்களில் நடித்த அவருக்கு மார்க்கெட் சட்டென சரிந்தது.

ஓரங்கட்டப்பட்ட கிரண்: மார்க்கெட் சரிந்ததை அடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் திருமலையில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன் பிறகு முழுவதுமாக ஒதுங்கியிருந்த அவர் சுந்தர் சியின் ஆம்பள படத்தில் நடித்தார். இப்போது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் அவர்; ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார். அந்த ஆப்பும் ஒரு விவகாரமான ஆப் என்றே பலராலும் கூறப்படுகிறது.

கிரண் பேட்டி: இந்நிலையில் நடிகை கிரண் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர், "பெண்களை ஆண்கள் பார்க்கும்போது அவர்களது கண்கள் பெண்களின் முன்னழகுக்குதான் போகும். நான் ஆண்களை பார்க்கும்போது அவர்களுடைய புஜத்தை பார்ப்பேன்" என குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் என்ன கிரண் இவ்ளோ ஓபனா சொல்லிட்டாங்க என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

விரக்தி கிரண்: முன்னதாக இன்னொரு பேட்டியில் பேசியிருந்த அவர், எதற்காக என்னை சினிமா உலகம் ஓரங்கட்டியது என்றே தெரியவில்லை. அது மட்டுமின்றி எனக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை திருமணம் நடந்துவிட்டது. நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். அது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது" என்று விரக்தியுடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X