Kiran: நான் ஆபாச படத்தில் நடிக்கல.. கவர்ச்சியா போட்டோ போட்டா.. கூப்புடுவியா? கிரண் வேதனை!
சென்னை: தமிழில் கமல்ஹாசன், அஜித்குமார், விக்ரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயர்களுடன் நடித்துள்ள கிரண், சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே காணாமல் போனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமூக வலைத்தளம் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நடிகை கிரண், நான் ஆபாச படத்தில் நடிக்கவில்லை என்னை ஏன் மீடியாக்கள் இப்படி பார்க்கிறது என்று தனது வேததனையை வெளிப்படுத்தி உள்ளார்.
சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் க்யூட்டாக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்த நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாந்த்துடன் வின்னர் திரைப்படத்திலும் கமலுடன் அன்பே சிவம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பின் நல்ல கதைகளை தேர்வு செய்யாததால் சினிமாவிற்கு வந்த சீக்கிரத்திலேயே இவருக்கு படவாய்ப்பு இல்லாமல் போனது. தற்போது இணையத்தில் கவர்ச்சி புயலாக வலம் வரும் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நடிகை கிரண் வேதனை: அதில், நான் ஒருவரை பைத்தியமாக காதலித்தேன். அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் மனம் உடைந்து போனேன். சினிமாவில் சில காலம் நான் காணதமல் போனதற்கு இல்லாமல் இருந்ததற்கு எனது காதல் தோல்வியே காரணம். வாழ்க்கையில் நான் தவறான முடிவு எடுத்ததால் வாழ்க்கை நாசமானது. இப்போது நான் நடிக்க விரும்புகிறேன். ஆனால் யாரும் என்னை அழைக்கவில்லை.
நைட் போன் வரும்: சினிமாவில் எல்லோரும் நிச்சயமாக உங்களுக்கு நல்ல கதாபாத்திரங்களை கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள். அதிக அக்கறை எடுத்துக் கொள்வது போல நடந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் பேசிய அன்றைய தினம் இரவு ஃபோன் செய்வார்கள். என்னை படுக்கைக்கு அழைப்பார்கள். அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். இந்த சினிமா துறையில் நண்பர்கள் என்று யாருமே கிடையாது என்று. இன்று வரை யாரும் எனக்கு உதவி செய்யவில்லை.
கிளாமர் போட்டோ: இந்த நேரத்தில் தான் என்னுடைய ஆப்பை நான் தொடங்கினேன். அதில் என்னுடைய கிளாமரான போட்டோக்கள், வீடியோக்களை பதிவு செய்தேன். அதைப்பார்த்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லோரும் என்னை படுக்க அழைத்தார்கள். ஒருத்தர் என்று சொல்லவில்லை, இப்படி நிறைய பேர் அழைத்து இருக்கிறார்கள். இதற்கு காரணம், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் கிளாமரான போட்டோக்களை, வீடியோக்களை பதிவு செய்கிறேன். அதனால் அப்படி நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.
நான் ஆபாச நடிகை இல்லை: நான் மட்டும் இப்படி கவர்ச்சி போட்டோவை போடவில்லை, பல நடிகைகள் இப்படித்தான் போடுகிறார்கள். ஆனால், நான் போட்டால் மட்டும் மொத்த மீடியாவும் என்னை டார்க்கெட் செய்கிறார்கள். அதுதான் ஏன் என்று தெரியவில்லை, நான் ஒன்னும் ஆபாச படத்தில் நடிக்கவில்லையே, எனக்கு பிடித்த ஆடைகளை உடுத்தி நான் வீடியோக்களை பதிவிடுகிறேன். கவர்ச்சி போட்டோக்களை போட்டாக படுக்கைக்கு அழைப்பார்களா. இணையத்தில் வரும் கமெண்டுகள் என்னை காயப்படுத்துவதாக நடிகை கிரண் வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











