Kiran: மியா கலிஃபாவாக மாறிய கிரண்... கவர்ச்சி ஆடையில் ரசிகர்களை அலறவிட்ட நடிகை!
சென்னை: பட வாய்ப்பு இல்லாததால் மொத்தமாக மாறிப்போன நடிகை கிரண், இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோ மற்றும் வீடியோக்களை போட்டு இணையத்தை திணறடித்து வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் மியா கலிஃபாவாக மாறிய கிரண் என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் நடிகையாக அறிமுக நடிகை கிரண், முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சின் மனதில் நின்றுவிட்டார். இதையடுத்து நடிகை கிரணுக்கு தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் குவிந்தனர். அந்த படத்தை தொடர்ந்து, சுந்தர் சி இயக்கிய 'அன்பே சிவம்' படத்தில் கமலுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அதன் பின் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த வில்லன் படத்திலும், பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் பிரசாந்த்துடன் ஜோடியாக நடித்திருந்தார். நடிகை கிரண் நடித்த அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்ததால், கிரணுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் கிடைத்தது.

படவாய்ப்பு இல்லை: பெரிய நடிகையாக ஒரு ஒரு ரவுண்டு வர வேண்டிய நடிகை கிரண், ஒருவரை காதலித்து வந்த நிலையில், அந்த காதல் தோல்வி அடைய வெளியில் தலைகாட்டாமல் இருந்தார். ஒரு வழியாக காதல் தோல்வியில் இருந்து மீண்ட கிரண், மீண்டும் வாய்ப்பு தேடி வர, இதற்குள் அவரின் மார்க்கெட் போய்விட்டது. அதேன் பின் வாய்ப்பு தேடி பாலிவுட், டோலிவுட் அலைந்த அம்மணிக்கு கதாநாயகியாக படவாய்ப்பு கிடைக்காததால், கவர்ச்சி நடிகையாக மாறினார்.

கவர்ச்சியான வீடியோ: இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை கிரண், பணத்திற்காக படுமோசமான கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் வீடியோ காலுக்கு, டின்னர் சாப்பிட, போன் பேச என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கட்டணத்தை வசூலித்து வந்தார். இது பெரிய அளவில் சர்ச்சையானதை அடுத்த, தற்போது அம்மணி, பாலோவர்களை அதிகரிக்க தொடர்ந்து கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களை பார்த்த கிரணின் தீவிர ரசிகர்கள் மியா கலிஃபா என அவரை அழைத்து வருகின்றனர். நடிகை கிரணை இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











