Kiran: இன்ஸ்டாவிற்கு எல்லாம் சென்சார் இல்லையா? கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை கிரண்!
சென்னை: நடிகை கிரணுக்கு தற்போது படவாய்ப்பு இல்லாததால், இணையத்தில் படுமோசமான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். தற்போது, இவர் இணையத்தில் வெளியிட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சிலர் லைக்குகளை குவித்து வந்தாலும், சிலர் இவர் திட்டிதீர்த்து வருகின்றனர்.
நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில், அமல் பேபி போல வடமாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை கிரண் ரத்தோர்.சரண் இயக்கி ஜெமினி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை அள்ளியது. குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற ஓ போடு பாடல் அனைவரையும் ஆட்டம் போடவைத்தது. படத்தின் கதை, பாடல் என அனைத்தும் சிறப்பாக இருந்ததால் முதல் படமே கிரணுக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

நடிகை கிரண் ரத்தோர்: ஜெமினி இந்த படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய 'அன்பே சிவம்' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். அதைத்தொடர்ந்து அஜித் இரட்டை வேடத்தில் நடித்த 'வில்லன்' படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார். அதன் வின்னர் படத்தில் பிரசாந்த்துடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். கிரண் நடித்த அனைத்து படங்களும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், கிரணுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென பீல்ட் அவுட் ஆனார்.

கவர்ச்சி நடிகை: கிரண் பீக்கில் இருந்த நேரத்தில் காதலில் சிக்கி சினிமா கேரியரை தொலைத்தார். அதன், மீண்டும் வாய்ப்பு தேடி பாலிவுட்,டோலிவுட் அலைந்த அம்மணிக்கு படவாய்ப்பு எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் தமிழக்கு வந்தார். ஆனால், பீல்ட் அவுட்டாகி விட்டதால், கதாநாயகியாக வராமல் 'திருமலை' படத்தில் 'வாடியம்மா ஜக்கம்மா' என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அந்த பாடல் வெற்றி பெற்றதால், கிரண் கவர்ச்சி நடிகையாகவே மாறினார். எஸ்.ஜே சூர்யாவின் 'நியூ' படத்தில் மாமி கதாபாத்திரத்தில் இரட்டை வசனம் பேசி நடித்திருந்தார்.

காதல் தோல்வி: அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த கிரண், தமிழ் சினிமாவில் நல்ல படவாய்ப்பு வந்த போது, அதை சரியாக இவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றார். அப்போது நான் காதலித்து வந்தேன். ஆனால், அந்த காதல் பிரேக் அப் ஆகிவிட்டது, இதனால், நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன் அதில் இருந்து நான் மீண்டு வருவதற்குள் பட வாய்ப்பு போய்விட்டது என்றார். மேலும்,
தளபதி விஜய் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கில்லி படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் நடிக்க இவரிடம் கேட்கப்பட்டதாகவும் அந்த பேட்டியில் கிரண் கூறியிருந்தார்.

வரம்பு மீறிய கவர்ச்சி: தற்போது, கவர்ச்சி நடிகை பெயர் எடுத்துள்ள நடிகை கிரண், பணத்திற்காக படுமோசமான கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சில நேரம் இவர் பதிவிடும் வீடியோவை பார்ப்பதற்கு தர்மசங்கடமாக இருப்பதால், இவரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இணையத்தில் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பார்த்த இணையவாசிகள் இன்ஸ்டாகிராமிற்கு எல்லாம் சென்சார் இல்லையா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











