Kiran: அம்மணிக்கு என்ன ஆச்சு.. இப்படி இவங்கள பார்த்ததே இல்லையே.. முழுசா மாறிய கிரண்!

சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை கிரண். படவாய்ப்பு இல்லாததால், இணையத்தில் படுமோசமான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது, இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது உண்மையில் கிரண் தானா என கேட்டு வருகின்றனர்.

சியான் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில், அமல் பேபி போல வடமாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் கிரண் ரத்தோர்.சரண் இயக்கி ஜெமினி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற ஓ போடு பாடல் அனைவரையும் ஆட்டம் போடவைத்தது. படத்தின் கதை, பாடல் என அனைத்தும் சிறப்பாக இருந்ததால் முதல் படமே கிரணுக்கு ஹிட் திரைப்படமே அமைந்தது.

kiran instagram video

நடிகை கிரண் ரத்தோர்: இந்த படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய 'அன்பே சிவம்' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். அதன் அஜித்துக்கு ஜோடியாக 'வில்லன், படத்திலும், வின்னர் படத்தில் பிரசாந்த்துடன் ஜோடி போட்டு நடித்தார். இவர் நடித்த அடுத்தடுத்த படங்களும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், கிரணுக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காரணமே இல்லாமல் பீல்ட் அவுட் ஆனார்.

கவர்ச்சி நடிகை: இதைத்தொடர்ந்து பாலிவுட்,டோலிவுட் போன அம்மணிக்கு படவாய்ப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால், மீண்டும் தமிழுக்கு வந்தார். ஆனால், ஃபீல்ட் அவுட்டாகி விட்டதால், கதாநாயகியாக வராமல் 'திருமலை' படத்தில் 'வாடியம்மா ஜக்கம்மா' என்ற ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அந்த பாடல் வெற்றி பெற்றதால், கிரண் கவர்ச்சி நடிகையாகவே மாறினார். எஸ்.ஜே சூர்யாவின் 'நியூ' படத்தில் மாமி கதாபாத்திரத்தில் இரட்டை வசனம் பேசி நடித்திருந்தார்.

காதல் தோல்வி: அழகும்,திறமையும் இருந்த போதும் படவாய்ப்பு வந்த போது, அதை சரியாக இவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. தளபதி விஜய் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கில்லி படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் நடிக்க இவரிடம் கேட்கப்பட்டதாக கிரண் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், காதல் பிரேக்கப்பால் மன அழுத்தத்தில் இருந்ததால், அந்த நேரத்தில் சரியான முடிவை அவர் எடுக்கவில்லை.

கிரணுக்கு என்ன ஆச்சு: தற்போது, கவர்ச்சி நடிகை பெயர் எடுத்துள்ள நடிகை கிரண், பணத்திற்காக படுமோசமான கவர்ச்சி போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சில நேரம் இவர் பதிவிடும் வீடியோ முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கும்.இதனால், நெட்டிசன்கள் கழுவி ஊற்றினாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது,முழுசா முடியபடி இருக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ஃபேன்ஸ், கிரணுக்கு என்ன ஆச்சு என்றும், இப்படி இவங்கள பார்த்ததே இல்லையே என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X