அடச்சீ.. வெறும் டவலுடன் நிற்கும் கிரண்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகையான கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் டவலுடன் நிற்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
பட வாய்ப்பு இல்லாததால் நடிகை கிரண் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி சோஷியல் மீடியாவை ரணகளப்படுத்தி வருகிறார்.
இவர் பதிவிடும் போட்டோ மற்றும் வீடியோ ஓவர் கவர்ச்சியாக இருப்பதால் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதால் இணையவாசிகள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால், அதைப்பற்றி அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை.

நடிகை கிரண்: சரண் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் ஜெமினி. அந்த படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் தான் நடிகை கிரண். கொழுக் மொழுக் என்று இருந்த கிரணை தமிழ் ரசிகர்களுக்கு பயங்கரமாக பிடித்துவிட்டது. இதையடுத்து அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், பிரசாந்தின் வின்னர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
பணத்திற்காக: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்த கிரணுக்கு தற்போது வயதாகிவிட்டதால் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். இதனால், பொழப்புக்காக செயலி ஒன்றை தொடங்கி, அதில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பார்க்க, தன்னுடன் வீடியோ காலில் பேச, தன்னுடன் டின்னர் டேட்டிங் செய்ய தனித்தனியாக விலை நிர்ணயம் செய்து நூதன முறையில் சம்பாதித்து சர்ச்சையில் சிக்கினார்.
தெலுங்கு பிக் பாஸ் சீசன்7: இதையடுத்து, தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்தார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் குஷியானாலும் தமிழ் ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். நம்ம தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிரண் கலந்து கொண்டிருந்தால் ஆர்மி எல்லாம் ஸ்டார்ட் பண்ணி வேறலெவல் பண்ணிருக்கலாம் என புலம்பினார்கள். ஆனால், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வாரத்தில் எவிக்ட்டாகி வெளியேறினார்.
வெறும் டவலுடன்: பிக் பாஸ் நிகழ்ச்சியும் கை கொடுக்காததால், மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது, பாத்ரூமில் குளித்து முடித்து விட்டு வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் அடச்சீ இதே வேலையா போச்சு என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











