சுந்தர் சிக்காக அட்ஜஸ்ட் பண்ணேன்.. ஆனால், வேதனையில் புலம்பிய கிரண்!

சென்னை: ஒரு காலத்தில் க்யூட் நடிகையாக இருந்த கிரண், இப்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாததால், கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் வீடியோ மற்றும் போட்டோக்களை அப்லோடு செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில், நான் சுந்தர் சிக்காக அட்ஜஸ்ட் பண்ணேன், ஆனால் அவர் மோசமாக நடத்திவிட்டார் என்று தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

சீயான் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படத்தில் அச்சில் வார்த்த சிலை போல இருந்தார் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாந்த்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இந்த திரைப்படங்கள் அனைத்தும் வசூலை குவித்த நிலையிலும் இவருக்கு படவாய்ப்பு இல்லை. இதையடுத்து, விஜய் நடித்த திருமலை படத்தில் "வாடியம்மா ஜக்கம்மா" என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ஐட்டம் பாடலுக்கு ஆட ரெடி என பச்சைக்கொடிகாட்டினார்.

actress kiran rathod latest interview about sunder c movie Aambala

நடிகை கிரண் ரத்தோட்: அதன் பிறகும் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட், டோலிவுட் என அலைந்து அலுத்துப்போனார். இதையடுத்து, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முத்துனகத்திரிக்காய் படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். மேலும், விஷாலுடன் ஆம்பள படத்தில் ஆண்டி ரோலில் நடித்திருந்தார். பட வாய்ப்பு வரவேண்டும் என்றால் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என அந்த படத்தில் ஒவர் கவர்ச்சி காட்டினார். அந்த படத்திற்கு பிறகு எந்த படவாய்ப்பும் வரவே இல்லை. வெட்கத்தை விட்டு கேட்டுப்பார்த்தும் படவாய்ப்பு வராததால், இணையத்தில் கவர்ச்சி போட்டோவை போட்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.

கசப்பான அனுபவங்கள்: இந்நிலையில், இவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார். இதில், சினிமாவில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் உள்ளது. அவரிடம் இந்த படத்தில் ஏன் நடித்தேன் என்று யோசித்த படம் எது என்று செய்தியாளர் கேட்க, ஆம்பள படத்தில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன், சுந்தர் சி அண்ணன் என்னுடைய அண்ணன் போன்றவர், அதனால், ஆம்பள படத்தில் நடிக்க கேட்ட போது நான் அவரிடம், எந்த கதாபாத்திரம் இருந்தாலும் கொடுங்கள் என்று சொன்னேன். அந்த கதாபாத்திரம் திருப்தி இல்லை என்றாலும், அவருக்காக அட்ஜஸ்ட் செய்து நடித்தேன். ஆனால், அவர், ஆம்பள படத்தில் ஏதோ செட் பிராப்பரிட்டியாக மட்டுமே நடிக்க வைத்து இருந்தார். என்னால் அந்த படத்தில் எதுவும் செய்ய முடியவில்லை, ஏன் நடித்தோம் என பல நாள் வருத்தப்பட்டு இருக்கிறேன்.

நான் செய்த பெரிய தவறு: மேலும், திருமணம் குறித்து பேசிய கிரண், நான் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போது எனக்கு திருமணம் நடந்தது. என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு, அந்த உறவானது முறிந்து போனது. இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு நான் வீட்டில் உட்கார வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். கஷ்ட காலம் அங்குதான் எனக்கு ஆரம்பமானது. காதல் என்னை எமோஷனலாக ஒரு முட்டாளாக்கி விட்டது. என்னை இன்ஸ்டாகிராமில் பார்க்கும் நபர்கள், இவ்வளவு கிளாமரா இருக்கிறாளே இவளுடைய குணம் எப்படி இருக்கும் என்று கேட்கிறார்கள். என்னை கடுமையாக திட்டுகிறார்கள், சில இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று கிரண் அந்த பேட்டியில் மன வேதனையை பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியை பார்த்த பலர் இவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X