படுக்கையறையில் கைவிலங்கு.. ரகசிய உறவு.. 'Sshhh 3' ஷோவில் பெட்ரூம் ரகசியங்களை ஓப்பனாக பேசிய கிரண்!
சென்னை: விக்ரமின் ஜெமினி, அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம் உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளையடித்தவர் நடிகை கிரண். தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சமூக வலைத்தளங்களில் எப்போதும் தனது அதிரடி கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டடு ரசிகர்களை தனது வசியப்படுத்தி வைத்து இருக்கிறார் கிரண். தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'Sshhh 3' என்ற அடல்ட் டாக் ஷோவில் கலந்துகொண்டு, தனது ரகசிய ஆசைகள் மற்றும் போல்டான ஃபேன்டஸிகள் குறித்து வெளிப்படையாகப் பேசி அதிரடி கிளப்பியுள்ளார். அவரின் பதிலை கேட்ட இளசுகளே வெட்கப்பட்டுப் போனார்கள்.
நடிகை கிரண்: இந்த நிகழ்ச்சியில் அவரிடம் கேட்கப்பட்ட காரசாரமான கசமுசா கேள்விகளும், நடிகை கிரண் நச்சுனு பதில் அளித்தள்ளார். படுக்கையறை ஃபேன்டஸியில் உங்களுக்கு எது பிடிக்கும் என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல் "ஹேண்ட்கஃப்" தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று போல்டாகப் பதிலளித்தார். மாஸ்க் அணிந்த ஒரு அந்நியருடன் இருக்கும் த்ரில்லிங் அனுபவம் பிடிக்குமா அல்லது நெருங்கிய நண்பனா என்ற கேள்விக்கு, மாஸ்க் அணிந்த அந்நியருடன் இருக்க பிடிக்க பிடிக்கும் என்று கூறினார்.

ரகசிய உறவு பிடிக்கும்: காதல் மற்றும் உறவைப் பொறுத்தவரை உலகிற்குத் தெரியாமல் ரகசியமாக வாழும் "சீக்ரெட் அஃபேர்" தான் எனக்குப் பிடிக்கும் என்று பதிலளித்தார். ஆபத்தான அந்நியனா? டாக்ஸிக் காதலுனுடன் இருக்க பிடிக்கமா என்ற கேள்விக்கு, பழைய காதலனுடன் டாக்சிக்காக இருப்பதைவிட ஒரு "டேஞ்சரஸ் ஸ்ட்ரேஞ்சர்" ஆபத்தான அந்நியனை எதிர்கொள்வதே பெட்டர் என கூறியுள்ளார். இறுதியாக, காதல் மற்றும் சுவைகளில் உங்களுக்கு எது விருப்பம் என்ற கேள்விக்கு, சாக்லேட்டை விட "ஹனி" தான் தனது சாய்ஸ் என்று இனிப்பாகப் பதிலளித்து நேர்காணலை முடித்துள்ளார். நடிகை கிரணின் இந்த ஓப்பனான மற்றும் அதிரடிப் பேச்சு, தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நடிகை கிரண் கடைசியாக வனிதா விஜயகுமார் இயக்கிய 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' என்ற படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications