Kiran: அதுதான் நான் செய்த தப்பு.. நள்ளிரவில் நீச்சல் குளத்தில் நடிகை கிரண்..தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: தமிழ் சினிமாவில் விக்ரம் ஜோடியாக 'ஜெமினி' படத்தில் அறிமுகமாகி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது அழகால் சுண்டி இழுத்தவர் மும்பை வரவான நடிகை கிரண் ரத்தோட். ஆரம்பமே அமர்க்களமாக அமைந்ததால் அன்பே சிவம், வின்னர் என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து டாப் நடிகையாக வலம் வந்தார். ஆனால், உச்சத்தில் இருந்த கிரணுக்கு திடீரென சினிமா வாய்ப்புகள் குறைந்து போனது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரண், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்கும் தனது லேட்டஸ்ட் கவர்ச்சிப் புகைப் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்குச் சூடான ட்ரீட் கொடுத்துள்ளார்.

நடிகை கிரண் உருக்கம்: சினிமாவில் மார்க்கெட் குறைந்ததும் பாலிவுட் பக்கம் வாய்ப்பு தேடிச் சென்ற கிரணுக்கு அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மீண்டும் தமிழ் சினிமாவிற்கே திரும்பி, வேறு வழியின்றி ஐட்டம் பாடல்களுக்கு ஆட்டம் போட்டார். நான் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ஒத்துக்கொண்டதுதான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு. அதற்குப் பிறகு எனக்கு ஹீரோயினாக வரவிருந்த கொஞ்சம் நஞ்சம் வாய்ப்புகளும் மொத்தமாகப் போய்விட்டன. என் மீது ஐட்டம் டான்ஸ் நடிகை என்ற முத்திரையைக் குத்தி ஓரங்கட்டி விட்டார்கள் என்று ஒரு பேட்டியில் கிரண் கூறியிருந்தார்.

Kiran photos
Photo Credit:

கவர்ச்சி வேட்டை: ஹீரோயின் வாய்ப்புகள் பறிபோனதால், சில படங்களில் கவர்ச்சி கேரக்டர்களிலும், ஆன்ட்டி வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார். ஆனால், அதிலும் பெரிய பிரேக் கிடைக்காததால், தற்போது தனது வாழ்வாதாரத்திற்காகவும் வருமானத்திற்காகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையே முழுமையாக நம்பியுள்ளார்.
அங்குத் தொடர்ந்து தனது கிளாமர் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவேற்றி வரும் கிரண், தற்போது நள்ளிரவில் நீச்சல் குளத்தில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் பிகினி போட்டோவை வெளியிட்டுள்ளார். 40 வயதைக் கடந்தும் குறையாத கிளாமரில் கிரண் வெளியிட்டுள்ள இந்த ஹாட் போட்டோ, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் செம்ம ட்ரெண்டாகி லைக்குகளைக் குவித்து வருகிறது. நடிகை கிரைணை இன்ஸ்டாகிராமில் மூன்று புள்ளி ஆறு பில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X