கவர்ச்சியில் அத்துமீறும் கிரண்… இந்த வயசுல இதெல்லாம் தேவையா விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் வெள்ளாவியில் வைத்து அவித்தது போல அழகாக மினுமினுப்பாக இருந்தார் கிரண் ரத்தோர்.
முதல் திரைப்படத்திலேயே யாருடா இந்த பொண்ணு என்று அனைவரும் கேட்கும் அளவுக்கு அழகாக இருந்தார் கிரண்.
தற்போது, இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

கிரண் ரத்தோர்
ஜெமினி திரைப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து, பிரசாந்த் நடித்த வின்னர் திரைப்படத்திலும் அழகு பதுமையாக நடித்திருந்தார் கிரண். இந்த படத்தில் வரும் "எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்த போது" பாடலில் வெள்ளை நிற பாவாடை தாவாணியில் தங்க சிலையாக ஜொலித்தார் கிரண் ரத்தோர்.

பாலிவுட் சென்றார்
அதன்பின் கமல்ஹாசனுடன் இணைந்து அன்பே சிவம் என்ற திரைப்படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா என்ற பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.

பல மொழிகளில்
தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஆண்ட்டியாகவே நடித்திருந்தார். அது அவரின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்தது.

கடுப்பான நெட்டிசன்ஸ்
இதற்கு மேல் படவாய்ப்பு வரப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்ட கிரண், தினம் தினம் ஒரு ரீல் வீடியோ, ஒரு அதீத கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அதிலும் சில சமயம் டூ பீஸ் போல உடை அணிந்து பளபள மேனியை காட்டி அவர் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. இதனால், கடுப்பாகிப்போன நெட்டிசன்ஸ், கவர்ச்சிக்கும் ஒரு எல்லை உண்டு, இந்த வயதில் இதெல்லாம் தேவையான என கேட்டு கண்டபடி திட்டிதீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











