தலையில் ஒத்த ரோசா.. டவலை மட்டும் கட்டிக்கொண்டு பிரபல நடிகை கொடுத்த வேற மாறி போஸ்!
மும்பை: நடிகைகள் தங்களுக்கு சினிமாவில் மார்க்கெட் போன பின்னர் முழுக்க முழுக்க கிளாமரில் களமிறங்கி விடுவது பெரும்பாலும் நடந்து வரும் ஒன்றுதான். கதாநாயகியாக அறிமுகமான காலத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு கொடிகட்டிப் பறக்கும் நடிகைகள் பலரும் ஒரு ரவுண்ட் வந்த பின்னர் கிளாமருக்கு தாவி விடும் நிலை எப்படியோ ஏற்பட்டு விடுகிறது. இப்படி இருக்கும்போது, நடிகை கிரண் மற்ற நடிகைகளைவிட கொஞ்சம் கூடுதலாகவே கிளாமருக்குத் தாவி விட்டார் போல. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்த உள்ளது.
நடிகை கிரண் தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவர் என்றே கூறலாம். ஜெமினி, வின்னர், அன்பே சிவம் என பல வெற்றிப் படங்களில் நடித்தவர் இவர். ஒரு கட்டம் வரை கலக்கிக் கொண்டு இருந்த கிரணுக்கு போட்டியாக புது புது நடிகைகள் வர சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டார். குறிப்பாக கதாநாயகியாக இருந்து ஓரம் கட்டப்பட்டார். இது ஒரு புறம் இருக்க, இயக்குநர் சுந்தர். சி-யின் வெற்றிப் படங்களான வின்னர் மற்றும் அன்பே சிவம் படங்களில் நடித்துள்ளார் கிரண். இதனாலே என்னவோ தனது படங்களில் கிரண் நடிக்க ஏதுவான கதாபாத்திரம் இருந்தால் உடனே, அவரை நடிக்க வைத்து வந்தார்.

விவகாரமான வெப்சைட்: 44 வயதை அடைந்த கிரண் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். ஒரு கட்டத்தில் நடிகர் ஒருவருடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார் கிரண், அதேபோல் மற்றொரு முறை வட இந்திய அரசியல் புள்ளி ஒருவருடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், இந்த கிசுகிசுக்களை பெரிதாக பொருட்படுத்தி கொள்ளாமல், தனது திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். இது மட்டும் இல்லாமல் இணையதளத்தில் அவர் தொடங்கிய சர்ச்சைக்குரிய வெப்சைட் பேசு பொருளாக மாறியது. குறிப்பாக அந்த வெப்சைட்டை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உபயோகிக்க முடியாது எனும் விதிமுறைகள் எல்லாம் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கிளாமர் கிரண்: கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் தன்னைப் பற்றிய பேச்சுக்கள் எப்போதும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டே இருந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். கிரண் தற்போது நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி நடித்துள்ள படமான மிஸ்டர் & மிஸஸ் படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி உள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் நாளை அதாவது ஜூலை 11ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது.
கிறங்கடிக்கும் புகைப்படம்: இந்நிலையில் கிரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. அதாவது தலையில் ஒத்த ரோசாவை சூடிக்கொண்டும், ஒரே ஒரு வெள்ளை டவலை மட்டும் கட்டிக்கொண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த போஸ்ட்க்கு ஒரு டவலால் உடலைச் சுற்றிக் கொள்வது என்பது தன்னம்பிக்கை அளிக்கிறது என கேப்ஷன் இட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











