டேபிள்ல உட்கார்ந்து மேல பார்த்தா என்ன தெரியுது? வைரலாகும் முன்னாள் ஹீரோயினின் ஸ்லிம் போட்டோஸ்!
சென்னை: பிரபல முன்னாள் ஹீரோயின் வெளியிட்டுள்ள ஸ்லிம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
லாக்டவுனில் இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு போட்டோவாக போட்டு தாக்கும் நடிகைகளில் ஒருவர், கிரண்.
முன்னாள் ஹீரோயினான கிரணுக்கு இப்போதும் ஏகப்பட்ட ரசிகர்கள்! அவர்களை இன்னும் மெயின்டெயின் பண்ணிக்கொண்டிருக்கிறார் சோசியல் மீடியா மூலம்.

ரசிகர்கள் ரியாக்ஷன்
அவர் ஒரு போட்டோ பதிவு செய்தால் கூட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளித் தெளிக்கிறார்கள். கமென்ட்களுக்கும் பஞ்சமில்லை. தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் இவர், அதற்கு ரசிகர்கள் கொடுக்கிற ரியாக்ஷன்களை அதிகமாக ரசிப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் பதில்
அதற்காகவோ என்னவோ அவரை அப்படி புகழ்ந்து தள்ளுகிறார்கள் ரசிகர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழ் சினிமாவை மிஸ் பண்ணுவதாகக் கூறியிருந்தார். வின்னர் பட பாடலுக்கு டிக்டாக்கில் ஆடியும் வீடியோ வெளியிட்டிருந்தார். அது தனக்குப் பிடித்த பாடல் என்றும் கூறியிருந்தார். வேறு சில பாடல்களுக்கும் டிக்டாக் வீடியோ வெளியிட்டிருந்த அவர், ரசிகர்களின் கேள்விக்குத் தமிழில் பதில் சொல்லி அசத்தினார்.

இப்படி ஆயிட்டீங்களே
சில நாட்களுக்கு முன், சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதில் கொஞ்சம் பூசினாற்போல அவர் தோற்றம் இருந்தது. இதனால், எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்களே என்று சிலர் கவலையோடு கூறியிருந்தனர். முதல்ல காஷ்ட்யூம் டிசைனரை மாத்துங்க என்று நெட்டிசன்ஸ் கலாய்த்திருந்தனர். இந்நிலையில் இப்போது உடல் குறைந்த ஸ்டில்லை வெளியிட்டுள்ளனர்.

அழகா இருக்கீங்க
இது த்ரோபேக் ஸ்டில்லா என்பது தெரியவில்லை. இதற்கு கேப்ஷனாக, வாழ்வதற்கான நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பதுதான் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் கண்டபடி கமென்ட்களை பதிவிட்டுள்ளனர். ஆஹா, கிரண் அழகா இருக்கீங்க.. எனக்காக ஒரே ஒரு டிரெடிசஷனல் லுக் போட்டோ போடுங்களேன் என்று கெஞ்சியிருக்கிறார் ஒரு ரசிகர்.

மரண மாஸ் அழகு
இன்னொருவர் கொஞ்ச நாளா அழகாயிட்டே வர்றீங்களே, எப்படி? என்று கேட்டுள்ளார். இது மரண மாஸ் அழகு.. அதுக்குள்ள எப்படி ஒல்லியானீங்க? என்று சிலர் விசாரித்துள்ளனர். ஜெமினி படத்துல இருந்து உங்களை கவனிக்கிறேன். இப்பவும் அதே அழகோட இருக்கீங்க என்று வழிந்திருக்கிறார் ஒரு நெட்டிசன். மற்றொருவர், பார்த்துங்க, டேபிள் உடைஞ்சிடாம? என்று கலாய்த்துள்ளார். இந்த புகைபடங்கள் வைரலாகி வருகின்றன.

சர்வர் சுந்தரம்
நடிகை கிரண் விக்ரமின் ஜெமினி மூலம் ஹீரோயின் ஆனவர். அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், சரத்குமாரின் திவான், அரசு, பிரஷாந்த் நடித்த வின்னர் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து வந்த இவர், இப்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.


Click it and Unblock the Notifications