ப்பா.. என்னா கலரு.. என்னா கிளாமரு.. விக்ரம் பட ஹீரோயினை பார்த்து வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை கிரண் ஷேர் செய்திருக்கும் கிளாமர் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது,
Recommended Video
பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமா மூலம் நடிப்பில் கால் வைத்தார் நடிகை கிரண். இதனை தொடர்ந்து ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரைத்துறையிலும் கால் பதித்தார்.
முதல் படத்திலேயே தனது இன்னொசன்ட் நடிப்பு, க்யூட் ரியாக்ஷன்ஸ், டான்ஸ் என ரசிகர்களை சுண்டி இழுத்தார். இந்தப் படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் பெற்றார் கிரண்.

அஜித் கமல்
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. வில்லன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார் கிரண். பின்னர் அன்பே சிவம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். வின்னர் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தார்.

மீண்டும் என்ட்ரி
தென்னவன் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த கிரண், அரசு, திருமலை, உளிளட்ட சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார் கிரண். 2015ஆம் ஆண்டு ஆம்பள படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார் கிரண்.

சர்வர் சுந்தரம்
2016 ஆம் ஆண்டு வெளியான முத்தின கத்தரிக்காய் படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாகவும் சுந்தர் சிக்கு மாமியாராகவும் நடித்திருந்தார். அதன் பிறகு இளமை ஊஞ்சல் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சந்தானத்துடன் அவர் இணைந்து நடித்திருந்த சர்வர் சுந்தரம் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது.

அரைகுறை உடை
இந்நிலையில் புதிய படங்கள் எதிலும் கமிட்டாகமல் உள்ள நடிகை கிரண் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார். தற்போது உடல் எடை கூடியிருக்கும் கிரண், உடம்புக்கு ஏற்றதுபோல் இல்லாமல் அரைகுறை உடையில் வெளுத்து வாங்கி வருகிறார்.
எடுப்பான நிறம்
அதோடு, இந்தி, தமிழ் என பல படங்களின் பாடல் காட்சிகள் மற்றும் டயலாக்குகளுடன் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் டீப் நெக் டாப்ஸில் முன்னழகை காட்டி செம கிளாமரான போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். கறுப்பு நிறத்தில் உள்ள அந்த உடையில் அவரது நிறம் எடுப்பாக தெரிகிறது.
என்னா கிளாமரு..
அதே உடையில் முகத்தில் கை வைத்து வெட்கப்பட்டு சிரிப்பது போன்ற ஒரு போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார் கிரண். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் என்னா கலரு.. என்னா கிளாமரு.. என ஜொள்ளு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











