பிரபல ஹீரோயினுக்கு உறுதியானது கொரோனா தொற்று.. குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு!

By

மும்பை: பிரபல நடிகைக்கும் அவரது குடும்பத்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Recommended Video

Corona Specialist | Lala Quarantine | Sandy's Princess

கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டு தினமும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் பீதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

 தீவிர முயற்சி

தீவிர முயற்சி

இந்தியாவிலும் இந்த உயிர்கொல்லி வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,123 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இது வேகமாக பரவி வருகிறது.

லாக்டவுன்

லாக்டவுன்

இந்த கொரோனா காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலை இழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. தினசரி வேலை பார்த்து சம்பாதிக்கும் தொழிலாளர்கள் கடும் கஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். பலர் பசி, பட்டினியுடன் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

 நடிகை கோயல் மாலிக்

நடிகை கோயல் மாலிக்

படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சில நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் சிக்கலில் உள்ளனர். இதற்கிடையே சில நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வங்காள நடிகை கோயல் மாலிக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர், அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார்.

குடும்பத்துடன்

குடும்பத்துடன்

அவர் மட்டுமின்றி, அவரது தந்தையும் பழம்பெரும் நடிகருமான ரஞ்சித் மாலிக் (75) தாயார் தீபா மாலிக், நடிகை கோயல் மாலிக்கின் கணவரும், தயாரிப்பாளருமான நிஸ்பால் சிங் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்துடன் அவர்கள் கொல்கத்தாவில் உள்ள தங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதை நடிகை கோயல் மாலிக் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 விரைவில் குணமடைய

விரைவில் குணமடைய

இதையடுத்து வங்காள திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சின்னத்திரை நடிகை நவ்யா சுவாமி, அவருடன் நடித்த ரவி கிருஷ்ணா, பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகை ஜெயந்தி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவரும் பாதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Read more about: corona heroine
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X