அடிபொலி.. பாலியல் கல்விக்கு பயன்படுத்திக்கோங்க.. ஓவியாவுக்கு சப்போர்ட் செய்த நடிகை

சென்னை: கேராளவை பூர்வீகமாகக் கொண்ட ஓவியா தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு தமிழ்நாடு முழுக்க ஃபேமஸ் ஆனார். அவருக்கென்று சமூக வலைதளங்களில் ஆர்மியும் உருவாக்கப்பட்டது. ஆனாலும் பிக்பாஸுக்கு பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ட்ரெண்டாகியுள்ளது.

களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியா; அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்த படங்களும் சரியாக ஹிட்டாகவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் மட்டும் நன்றாக ஓடியது. ஆனால் அந்தப் படத்தில் ஓவியா பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.

oviya bigg boss

பிக்பாஸ் ஓவியா ஆர்மி: பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார். அதில் ஓவியாவின் செயல்பாடுகளை பார்த்த ரசிகர்கள் ஓவியாவுக்கென்று தனி ஆர்மியை ஆரம்பித்தார்கள். தனது மனதில் பேசும், செய்யும் அவரை வைத்து மீம்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பரப்பினர். ரொம்பவே ஃபேமஸ் ஆனதால் ஓவியாதான் முதல் சீசனில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரவ் டைட்டிலை தட்டி சென்றார்.

காதல்: இதற்கிடையே பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா தனது சக போட்டியாளர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருந்தார். எனவே இரண்டு பேரும் காதலிப்பதாக பலரும் கூறினர். ஆனால் இரண்டு பேருமே அதுகுறித்து எதுவும் பேசாமல் இருந்தனர். பிக்பாஸ் முடிந்த பிறகு இரண்டு பேரும் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அந்தவகையில் ஓவியா காஞ்சனா 3, 90 எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றது.

திருமணம் இல்லை: ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் பிக்பாஸுக்கு பிறகும் இல்லாததால் திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு காரணம் ஆரவ்தான் என கூறப்பட்டது. ஆனால் அதனை அவர் மறுத்தார். மேலும் ஓவியா ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் கூறினர். அதனையும் ஒரு பேட்டியில் திட்டவட்டமாக மறுத்தார்.

ட்ரெண்டாகும் வீடியோ: சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் இருப்பது ஓவியா என்று பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அதுதொடர்பாக நெட்டிசன் ஒருவர், 17 நொடிகள்தான் வீடியோ இருக்கிறது கம்மியாக உள்ளது என கூற; அதற்கு ஓவியாவோ அடுத்த முறை என ரிப்ளை செய்தார். அதேபோல் உங்கள் தொடர்பான வீடியோ ஒன்று வந்திருக்கிறதே என்று இன்னொருவர் கூற; என்ஜாய் என ரிப்ளை செய்து தக் லைஃப் கொடுத்தார்.

நடிகையின் சப்போர்ட்: ஓவியாவின் இந்த ரிப்ளை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் அவருக்கு பலரும் சப்போர்ட் செய்தனர். இந்நிலையில் நடிகை கொற்றவை தனது எக்ஸ் தள பக்கத்தில் ஓவியாவின் கமெண்ட்டை குறிப்பிட்டு, "ஐந்து வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறத்தலின்போது அந்தரங்க வீடியோ வெளியே வருவது பற்றி பேசினேன். அதில், எனது உடலை யாராவது இப்படி மறைந்திருந்து படம் பிடித்து சோஷியல் மீடியாவில் விட்டால் தயவு செய்து அதனை பாலியல் கல்விக்கு பயன்படுத்துங்கள் என்ற மனநிலைக்கு தயாராகி இருக்கிறோம் என கூறினேன். இப்போது அதுவே பிரதிபலித்திருக்கிறது. ஓவியா அடிபொலி" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X