அரபிக் குத்து பாடலுக்கு பெல்லி டான்ஸ் .. ஒரே வீடியோவில் ரசிகர்களை கவிழ்த்த க்ரித்தி ஷெட்டி!
சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2022 ஆண்டு வெளியாகி திரைப்படம் பீஸ்ட். இதில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்துப் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்த பாடலுக்கு நடிகை க்ரித்தி ஷெட்டி வேறுவிதமாக ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்த பீஸ்ட் திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் சுமார் 236.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். படத்தின் முதல் சிங்கிள் பாடலாக அரபிக் குத்து பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். சுமார் 4.40 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்தப் பாடலின் வரிகள் குறித்து அப்போது வைரலாக பேசப்பட்டன. பாடலை அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் இணைந்து பாடி இருந்தனர். இப்பாடல் யூடியூப்பில் 500 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

அரபிக்குத்து: மேலும், பீஸ்ட் திரைப்படம் வெளியான போது எந்த பக்கம் பார்த்தாலும், அரபிக் குத்து பாட்டுத்தான் ஓடிக்கொண்டே இருக்கும். மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கீர்த்தி சுரேஷ், சுஜிதா, கனிகா, யுவன் சங்கர் ராஜா, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.
இப்படிக்கூட ஆடலாமா: பீஸ்ட் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆன போதும் இன்னும் அரபிக் குத்து பீவர் குறையவில்லை என்பதை நடிகை கீர்த்தி ஷெட்டி நிரூபித்துள்ளார். வண்ண, வண்ண உடைகளை அணிந்து, தனது ஒல்லி பெல்லியை காட்டி அட்டகாசமாக ஆட்டம் போட்டுள்ளார். இவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த பேன்ஸ், இடுப்பின் அழகைப்பார்த்து திக்குமுக்காடி போனார்கள். இந்த வீடியோ க்ரித்தி ஷெட்டியின் ரசிகர்கள் ஷெர் செய்து வருகின்றனர்.
நடிகை க்ரித்தி ஷெட்டி: அழகான க்யூட் நடிகையான க்ரித்தி ஷெட்டி, தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக இருக்கிறார். இவர் நடித்த உப்பெனா தெலுங்கு படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனதை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவரை தேடி வருகினற்ன. அந்த வகையில் இவர் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த இவர். சூர்யா இந்த படத்தில் விலகியதை அடுத்து அருண் விஜயோடு இணைந்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











