ஆமா, அந்த ஹீரோவை காதலித்து வருவது உண்மைதான், அதனாலென்ன? ஒப்புக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் பட ஹீரோயின்!

By

மும்பை: அந்த ஹீரோவை காதலிப்பது உண்மைதான், ஆனால், திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

சுமந்த் ஹீரோவாக நடித்த போனி என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிர்த்தி கர்பன்டா.

பிறகு நானியின் அல மொடலைண்டி, பவன் கல்யாணின் தீன் மார் உட்பட சில படங்களில் நடித்து வந்த இவர், பிறகு கன்னடத்துக்குச் சென்றார்.

புரூஸ்லீ ஹீரோயின்

புரூஸ்லீ ஹீரோயின்

தமிழில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக புரூஸ்லீ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் சரியாக ஓடவில்லை. இதையடுத்து தமிழில், துல்கர் சல்மான் நடிக்கும் வான் படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். பின்னர் இந்திக்குச் சென்றார். அங்கு இம்ரான் ஹாஸ்மி ஜோடியாக, 'ராஷ்: ரீபூட்' என்ற படம் மூலம் அறிமுகமானார்.

புல்கிட் சாம்ராட்

புல்கிட் சாம்ராட்

பிறகு ராஜ்குமார் ராவ் ஜோடியாக, 'ஷாதி மேன் ஜரூன் ஆனா' என்ற படத்தில் நடித்தார். அடுத்து புல்கிட் சாம்ராட் ஜோடியாக வீரே கி வெட்டிங், அக்‌ஷய்குமாரின் ஹவுஸ்புல் 4, அனில் கபூர், ஜான் ஆப்ரஹாம், புல்கிட் சாம்ராட் நடித்த காமெடி படமான பகல்பன்டியில் நடித்தார். இப்போது பிஜோய் நம்பியார் இயக்கும் டைஷ் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதிலும் புல்கிட் சாம்ராட் ஹீரோவாக நடித்து வருகிறார்.

காதலில் விழுந்தார்

காதலில் விழுந்தார்

வீரே கி வெட்டிங் படத்தில் நடித்த போது புல்கிட் சாம்ராட்டுடன் கிர்த்தி காதலில் விழுந்ததாகச் செய்திகள் வெளியாயின. ஆனால், இதுபற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து டைஷ் படத்தில் நடிக்கும் இருவருக்கும், காதல் நெருக்கம் அதிகமாகி விட்டதாகக் கூறப்பட்டது. அப்போதும் எதுவும் தெரிவிக்காமல் இருந்த கிர்த்தி, பின்னர் காதலை ஒப்புக்கொண்டார்.

உண்மைதான்

உண்மைதான்

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. இதுபற்றி கிர்த்தி கூறும்போது, 'நாங்கள் டேட்டிங்கில் இருப்பது உண்மைதான். ஒவ்வொரு நாளையும் எங்களுக்கானதாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், அவரோ, நானோ இன்னும் திருமணத்துக்குத் தயாராக இல்லை. அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும்.

Recommended Video

Save Street Dogs | Namitha humble request | Tamannah Tips
பியானோ கற்பேன்

பியானோ கற்பேன்

அவர் இப்போதைக்கு ஒரு குழந்தையாக இருக்கிறார். அதனால் நாங்கள் எந்த திருமணத் திட்டங்களையும் இப்போது வைத்திருக்கவில்லை' என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர் கிதார் வாசிப்பார். நான் அவரிடம் இருந்து பியானோ கற்றுக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X