ரெண்டு விஜய்யோடயும் நடிக்கணும்.. சூர்யா நாயகியோட ஆசையை பாருங்க!

சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 41 படத்தில் பாலா இயக்கத்தில் தற்போது கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நாக சைத்தன்யா -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகவுள்ள என்சி22 படத்திலும் இணைந்துள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாக உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.

நடிகை கிருத்தி ஷெட்டி

நடிகை கிருத்தி ஷெட்டி

நடிகை கிருத்தி ஷெட்டி விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த உப்பேனா என்ற தெலுங்கு படத்தின்மூலம் சிறப்பான நாயகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் அவரது ப்ரெஷ் லுக் மற்றும் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்தப் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு கிடைத்தனர்.

தெலுங்கில் சிறப்பான படங்கள்

தெலுங்கில் சிறப்பான படங்கள்

முன்னதாக சூப்பர் 30 என்ற படத்தில்தான் இவரது அறிமுகம் அமைந்தது. இந்தப் படம் கடந்த 2019ல் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய் படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் சாய் பல்லவியும் மற்றொரு நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படமும் க்ருத்தி ஷெட்டிக்கு சிறப்பாக அமைந்தது.

சூர்யா படத்தில் அறிமுகம்

சூர்யா படத்தில் அறிமுகம்

அடுத்தடுத்த சிறப்பான படங்களில் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் இவரை யார் அறிமுகப்படுத்துவார்கள் என்ற கேள்வி தொடர்ந்து ரசிகர்களிடையே காணப்பட்டது. முதலில் தனுஷிற்கு ஜோடியாக இவர் கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இவர் சூர்யாவின் படத்தின்மூலம் தான் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

கோவாவில் சூட்டிங்

கோவாவில் சூட்டிங்

பாலா -சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் சூர்யா 41 படத்தில் தற்போது கிருத்தி ஷெட்டி நாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக கோவாவில் ஜூலையில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது. இதிலும் கிருத்தி ஷெட்டி கலந்துக் கொள்ளவுள்ளார்.

நாகசைத்தன்யாவுடன் கிருத்தி

நாகசைத்தன்யாவுடன் கிருத்தி

இந்நிலையில் வெங்கட் பிரபு -நாகசைத்தன்யாக கூட்டணியில் உருவாகவுள்ள என்சி 22 படத்திலும் கிருத்தி ஷெட்டி கமிட்டாகியுள்ளார். தமிழ், தெலுங்கில் இருமொழிப் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் பூஜை இரு தினங்களுக்கு முன்பு போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் நாகசைத்தன்யாக தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இரண்டு விஜய்யுடன் நடிக்க விருப்பம்

இரண்டு விஜய்யுடன் நடிக்க விருப்பம்

கிருத்தி ஷெட்டிக்கு இது இரண்டாவது படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில் இரண்டு விஜய்யுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அது என்ன இரண்டு விஜய் என்கிறீர்களா. நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதியுடன் இணைந்து படங்களில் நடிக்கவே கிருத்தி ஷெட்டி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இளம் புயல் கிருத்தி

இளம் புயல் கிருத்தி

இவர்கள் இருவருடனும் இணைந்து நடிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. அழகான இளம் புயலாக தென்னிந்திய மொழிகளில் களமிறங்கியுள்ள கிருத்தி ஷெட்டியின் விருப்பம் விரைவில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கலாம். விஜய்யும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் சூழலில் கிருத்தி விரைவில் அவருடன் இணைவார் என்பதே ரசிகர்களின் கணிப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X