அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் - குஷ்பு
சென்னை: அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கூறியிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சாந்தோம் பகுதியில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கணவர் சுந்தர்.சியுடன் வந்து வாக்கினைப் பதிவு செய்தார்.

வாக்களித்த பின் நடிகை குஷ்பூ அளித்த பேட்டியில் '' தேர்தல் ஆணையம் கைப்பற்றிய 100 கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தில் 99% அதிமுகவினருடையது தான்.
அதிமுகவினருக்கு தோல்வி பயம் வந்ததால் எப்படியாவது பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் ஜனநாயக முறையில் வாக்களிக்கும் மக்கள் தங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் எனத் தீர்மானிக்கும் நாள் இது.
இதுவரை எந்தத் தேர்தலிலும் 2 தொகுதிகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது கிடையாது. நிச்சயம் அதிமுக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'' என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











