20 கிலோ எடை குறைத்த நடிகை குஷ்பூ... மற்றவர்களுக்கு உத்வேகமாக இருக்க ஆசை

சென்னை : நடிகை குஷ்பூ சிறப்பான பல படங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகையாக வெளிப்படுத்தியவர்.

சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தில் இவர் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் தனது எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம்மாகவும் அழகாகவும் மாறியுள்ளார்.

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ தனது சினிமா கேரியரில் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார் கமல், ரஜினி என இவர் முக்கியமான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தொடர்ந்து நடிப்பு

தொடர்ந்து நடிப்பு

இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து செட்டில் ஆன குஷ்பூ ஆயினும் தொடர்ந்து பல படங்களில் கேமியோ ரோல்களில் நடித்து வருகிறார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தையும் சிறப்பாக கையாண்டு வருகிறார்.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இவர் இணைந்து நடித்திருந்த அண்ணாத்த படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்திருந்தார் குஷ்பு. ரஜினியின் முன்னால் ஹீரோயினான குஷ்புவிற்கு இந்த படத்தில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்திருந்தனர்.

எடை குறைத்த குஷ்பூ

எடை குறைத்த குஷ்பூ

இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு குஷ்பு தன்னுடைய உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து ஸ்லிம்மாக காணப்படுகிறார். இவரது சமீபத்திய புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அண்ணாத்த படத்தின் ரிலீசுக்கு பிறகு தான் படத்தில் மிகவும் குண்டாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

20 கிலோ எடை குறைப்பு

20 கிலோ எடை குறைப்பு

ரசிகர்கள் மன்னிக்கும்படியும் கேட்டிருந்தார். இந்நிலையில் தற்போதைய புதிய ட்வீட்டில் தான் இருபது கிலோ வரை எடை குறைந்துள்ளதாகவும் இந்த விஷயத்தில் தன்னால் பத்து பேர்களுக்கு உத்வேகம் அளிக்க முடிந்தால் சிறப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Akila Exclusive | Simbu முதல் Vijayakanth வரை நான்தான் தங்கச்சி | Filmibeat Tamil
ஹெல்த் இஸ் வெல்த்

ஹெல்த் இஸ் வெல்த்

மேலும் ஹெல்த் இஸ் வெல்த் என்றும் அவர் கூறியுள்ளார்.அனைவரும் தங்களது உடல்நலனை சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தன்னுடைய உடல்நலன் குறித்து விசாரித்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X