Kushboo: சத்யராஜ் செட்ல இருந்தா.. அவரோடதான் அதிகமான படங்கள் நடிச்சிருக்கேன்.. குஷ்பூ ஜாலி பேட்டி!
சென்னை: நடிகை குஷ்பூ ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி சேர்ந்து நடித்தவர். வருஷம் 16 படத்தில் கார்த்திக்குடன் இணைந்து தனது முதல் படத்திலேயே குஷ்பூ தன்னுடைய கவர்ச்சியான உடல் வாகால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். மிகப் பெரிய ஹிட் பட நாயகியாக வலம்வந்தவர்.
தன்னுடைய சினிமா கேரியர் குறித்தும் சக நடிகர்கள் குறித்தும் அடுத்தடுத்த சுவாரசியங்களை கலா மாஸ்டருடன் இணைந்து குஷ்பூ பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சத்யராஜுடன் தான் நடித்த அனுபவங்களையும் குஷ்பூ பகிர்ந்துள்ளார். தற்போது அரசியல்வாதி, தயாரிப்பாளர், நடிகை என பன்முகம் காட்டி வருகிறார் குஷ்பூ.

நடிகை குஷ்பூ: நடிகை குஷ்பூ வருஷம் 16 படத்தின் மூலம் கோலிவுட்டில் தன்னுடைய நாயகிக்கான பயணத்தை தொடங்கியவர். தொடர்ந்து ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார் குஷ்பூ. ஒரு கட்டத்தில் தன்னுடைய படத்தை இயக்கிய இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ, இரண்டு மகள்களுக்கு தாயாகியுள்ளார். இதில் மூத்த மகள் அவந்திகா நடிகையாக மாற உள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் குஷ்பூ தெரிவித்துள்ளார். தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்கள் குறித்து அடுத்தடுத்த சுவாரசியங்களை பகிர்ந்து வருகிறார் குஷ்பூ.
நாட்டாமை படம்: நாட்டாமை படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தான் வயதான கேரக்டரை ஏற்று நடித்த நிலையில் அப்போது தனக்கு 24 வயது தான் ஆகியிருந்தது என்றும் காதோரம் வெள்ளை சாயம் பூசிக்கொண்டு தான் நடித்ததாகவும் முன்னதாக இந்த கேரக்டரில் தன்னை நடிக்க வைக்க கேஎஸ் ரவிக்குமார் தயங்கியதாகவும் அவருக்கு வயதான கேரக்டரில் தான் நடிப்பது குறித்து நம்பிக்கையே இல்லை என்றும் ஆனால் அந்த கேரக்டரை தான் சிறப்பாக்கியதாகவும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களின் லிஸ்டில் அந்த படமும் உள்ளதாகவும் குஷ்பூ தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சத்யராஜ் -குஷ்பூ ஜோடி: இதனிடையே நடிகர் சத்யராஜ் குறித்தும் குஷ்பூ தனது அடுத்தடுத்த சுவாரசியங்களை பகிர்ந்துள்ளார். தான் தமிழில் நடிகன் படத்தின் மூலம் சத்யராஜுக்கு ஜோடியாக முதல் முறையாக நடித்ததாகவும் தொடர்ந்து பிரம்மா, வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட 13 படங்களில் தான் சத்யராஜுடன் இணைந்து நடித்துள்ளதாகவும் தமிழில் தான் அதிகமான படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த ஒரே நடிகர் சத்யராஜ் என்றும் அவருடன் 13 படங்களில் தான் ஜோடியாக நடித்துள்ளதாகவும் குஷ்பூ தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். சத்யராஜுடன் இணைந்து நடிக்கும்போது அந்த செட்டே மிகவும் கலகலப்பாக இருக்கும் என்றும் குஷ்பூ கூறியுள்ளார்.
ஜாலியான கூட்டணி: சத்யராஜுடன் கவுண்டமணியும் கூட்டணி சேர்ந்து விட்டால் சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருக்கும் என்றும் குஷ்பூ தனது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார். தான் முதன்முதலில் சத்யராஜுடன் இணைந்து நடித்த நடிகன் படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் நடந்த நிலையில் அந்தப் படம் தனக்கு மறக்க முடியாத படமாக அமைந்ததாகவும் குஷ்பூ மேலும் குறிப்பிட்டுள்ளார். நடிகன் படத்தில் சத்யராஜுடன் குஷ்பூ, கவுண்டமணி, மனோரமா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











