Actress Kushboo: பொம்மைக்குட்டி.. அந்த ஃபீல் எதுவும் மாறவில்லை.. குஷ்பூ நெகிழ்ச்சிப்பதிவு!

சென்னை: நடிகை குஷ்பூ தொடர்ந்து பல ஆண்டுகளாக நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் கோலிவுட்டில் மாஸ் காட்டி வருபவர். தன்னுடைய படங்களை இயக்கிய சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்கள் உள்ள நிலையில் இதில் அவந்திகா, நடிகையாக உள்ளதாகவும் அவருக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து வருவதாகவும் குஷ்பூ தனது பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வரும் குஷ்பூ, தன்னுடைய குடும்ப நிகழ்வுகள், தயாரிக்கும் படங்கள், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட பலவற்றையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தன்னுடைய மகள் குறித்து குஷ்பூவின் புதிய பதிவு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Kushboo Instagram tamil cinema

நடிகை குஷ்பூ: நடிகை குஷ்பூ பல ஆண்டுகளைக் கடந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும் நடித்து வருகிறார். தற்போதும் குஷ்பூவை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினியுடன் அவர் நடித்திருந்த அண்ணாத்த திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்த போதிலும் மீனாவுடன் இணைந்து குஷ்பூ நடித்திருந்த காட்சிகள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தன. இந்நிலையில் நடிகர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டு தயாரிப்பாளராகவும் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் குஷ்பூ.

தயாரிப்பாளர் குஷ்பூ: தனது சொந்த தயாரிப்பில் சுந்தர் சி நடித்து இயக்கியிருந்த அரண்மனை 4 படத்தை தயாரித்திருந்தார் குஷ்பூ. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான இந்தப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நூறு கோடி கிளப்பிலும் இணைந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய படங்களை இயக்கிய சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட குஷ்பூவிற்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது நன்கு வளர்ந்துள்ள அவர்கள், தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக பேட்டி ஒன்றில் குஷ்பூ தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் நடிகை குஷ்பு, தொடர்ந்து தனது குடும்ப நிகழ்வுகள். மகள்கள், கணவர் குறித்த பதிவுகள், தான் தயாரிக்கும் படங்கள் குறித்த அடுத்தடுத்த தகவல்கள், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மகள் அவந்திகா குறித்த புதிய பதிவு ஒன்றை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். இருவேறு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் குஷ்பூ, குழந்தையாக அவந்திகாவை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் மற்றும் தற்போது அவந்திகா குஷ்புவின் மீது படுத்தபடி இருக்கும் படியான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பொம்மைக்குட்டி: இந்நிலையில் வருடங்கள் கடந்தாலும் இந்த இரண்டு புகைப்படங்களும் ஒரே மாதிரியான ஃபீலை தான் கொடுத்ததாக குஷ்பூ தனது கேப்ஷனில் தெரிவித்துள்ளார். மகளை பொம்மைக்குட்டி என்றும் செல்லம் கொஞ்சியுள்ளார். குஷ்புவின் இந்த நெகிழ்ச்சியான பதிவு ஏராளமான ரசிகர்களின் லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் பெற்று வருகின்றன. அடுத்ததாக தன்னுடைய அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலகலப்பு 3 படத்தை தயாரிக்கவுள்ளார் குஷ்பூ. படத்தை அவரது கணவர் சுந்தர் சி இயக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X