Actress Kushboo: மகள்கள் சந்திக்கும் பாடி ஷேமிங்.. அட்வைஸ் கொடுத்த நடிகை குஷ்பூ!
சென்னை: நடிகை குஷ்பூ தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர். தற்போதும் கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தியில் என்ட்ரி கொடுத்தாலும் குஷ்பூவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது தென்னிந்திய மொழிப்படங்கள்தான். தமிழில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஒருகட்டத்தில் தன்னுடைய படத்தின் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் குஷ்பூ. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவர் தயாரிப்பாளராகவும் ஒருவர் நடிகையாக மாறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சினிமா, தயாரிப்பு இவற்றில் மட்டுமில்லாமல் அரசியலிலும் கவனம் ஈர்க்கும்வகையில் செயல்பட்டு வருகிறார் குஷ்பூ.

நடிகை குஷ்பூ: நடிகை குஷ்பூ தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் நடித்துள்ளார். தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்தப் படங்கள் அதிகமாக ஹிட்டடித்த நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பூ. இந்நிலையில் முறைமாமன் உள்ளிட்ட படங்களை தன்னை வைத்து இயக்கிய சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் குஷ்பூ. இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்களும் உள்ளனர்.
குஷ்பூ மகள்கள்: இவர்களில் ஒருவர் தயாரிப்பாளராகவும் ஒருவர் நடிகையாகவும் மாற விரும்புவதாக முன்னதாக பேட்டியொன்றில் குஷ்பூ தெரிவித்திருந்தார். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதில் கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் தக் லைஃப் படத்தில் இவரது மகள் அனந்திதா உதவி இயக்குநராக இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தன்னுடைய குடும்ப புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்த குஷ்பூ, தன்னுடைய பலமும் அதே நேரத்தில் பலவீனமும் இவர்கள் மூவர்தான் என்று கூறியிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பாடி ஷேமிங் குறித்து குஷ்பூ: சுந்தர் சி இயக்கத்தில் அவர்களது சொந்த தயாரிப்பில் அரண்மனை 4 படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு நடந்த நிலையில், அதில் தன்னுடைய மகளுடன் வந்த குஷ்பூ, புகைப்படததிற்காக போஸ் கொடுத்த நிலையில் அவரது மகளோ, அங்கிருந்து நழுவிவிட்டார். தொடர்ந்து குஷ்பூ அவரை கலாய்த்ததை தொடர்ந்தே அவர் வந்து சேர்ந்துக் கொண்டார். இந்நிலையில் தன்னுடைய மகள்கள் சமூக வலைதளங்களில் அதிகமான பாடி ஷேமிங்கை எதிர்கொண்டு வருவதாக குஷ்பூ தனது பேட்டியொன்றில் முன்னதாக கூறியுள்ளார்.
மகள்களுக்கு குஷ்பூ அட்வைஸ்: குழந்தைகளாக இருந்தபோது இருவரும் குண்டாக கொழுக் மொழுக் என்று இருந்ததை அனைவரும் பாராட்டியதாகவும் ஆனால் வளர்ந்துவிட்ட நிலையில் அவர்களது உருவம் கேலிக்குறியதாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் தன்னுடைய அப்பாவை போலவே மிகவும் வளர்ந்துள்ள சூழலில் அவர்களின் உடலும் அதிக குண்டாக காணப்படுவதாகவும் இதனால் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பாடி ஷேமிங்கை சந்திப்பதை தான் பார்ப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதை நிராகரிக்க தான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளதாகவும் குஷ்பூ அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











