Kushboo: அந்த விஷயம் தெரிஞ்சிருந்தா ரஜினியோட நடிச்சிருக்கவே மாட்டேன்.. குஷ்பூ வருத்தம்!
சென்னை: நடிகை குஷ்பூ பல ஆண்டுகளாக முன்னணி ஹீரோயினாகவும் தற்போது கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார். தயாரிப்பாளராக தன்னுடைய கணவர் சுந்தர் சியுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வரும் குஷ்பூ, அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு பேசியுள்ள குஷ்பூ, அந்த படத்தில் தான் நடித்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். படத்தின் கதையை இயக்குனர் தங்களிடம் வேறு மாதிரியாக கூறியதாகவும் படத்தில் ரஜினிக்கு ஹீரோயின் முதலில் இல்லை என்றும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பூ: நடிகை குஷ்பூ அடுத்தடுத்த படங்களில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். ஹீரோயினாக ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் குஷ்பூ. படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் குஷ்பூ, கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்திற்காக ஜப்பான் சென்றிருந்தார். அங்கு இவரும் மீனாவும் நெப்போலியனுடன் சேர்ந்து செய்த அலப்பறைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
ஜப்பானில் குஷ்பூ: நெப்போலியனுடன் இணைந்து இருவரும் டூயட் பாடியிருந்தனர். திருமண கொண்டாட்டத்துடன் இவர்களின் கொண்டாட்டங்களும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. தொடர்ந்து நெப்போலியன் ஏற்பாடு செய்திருந்த டூரிலும் மீனா, ராதிகா, சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் குஷ்பூ இணைந்து சாலையில் நடனம் ஆடியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் நடிகை குஷ்பூ அண்ணாத்த படம் குறித்து பேசிய வீடியோ, தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது. அண்ணாத்த படத்தில் தான் நடித்து இருக்கவே கூடாது என்று குஷ்பூ தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படம் குறித்து குஷ்பூ: முதலில் இந்த படத்தின் கதையை தங்களுக்கு இயக்குநர் கூறியபோது தானும் மீனாவும் மட்டும்தான் படத்தில் லீட் கேரக்டர்களில் இருந்ததாகவும் ரஜினிக்கு ஜோடி கிடையாது என்பதாகத்தான் கதை சொல்லப்பட்டதாகவும் குஷ்பூ தெரிவித்துள்ளார். ஆனால் தானும் மீனாவும் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த நடித்த பின்பு, ரஜினிக்கு நயன்தாரா ஹீரோயினாக வந்தார் என்றும் குஷ்பூ கூறியுள்ளார். தானும் மீனாவும் மட்டும் ரஜினியுடன் அலப்பறை செய்வதாகவும் தொடர்ந்து அவர் தன்னுடைய தங்கையை தேடிக்கொண்டு மும்பை செல்லும் போது தாங்களும் செல்வதாக தான் கதை இருந்ததாகவும் குஷ்பூ மேலும் கூறியுள்ளார்.
குஷ்பூ வருத்தம்: ஆனால் கதைக்களம் மாறியதால் தாங்கள் இடைவேளை வரை மட்டுமே படத்தில் வந்ததாகவும் இந்த கேரக்டர் எதற்காக என்பதுபோல கேள்விகள் எழுந்ததாகவும் குஷ்பூ வருத்தம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, நயன்தாரா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் சிவா. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசான நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் குஷ்பூவும் இந்த படம் குறித்து இவ்வாறு பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











