கொண்டையில் தாழம்பூ பாட்டை தியேட்டர்ல பார்த்து பயந்து ஓடிவந்துட்டேன்.. நினைவுகளை பகிர்ந்த குஷ்பூ!
சென்னை: நடிகை குஷ்பூ தன்னுடைய முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்து கோலிவுட்டில் மாஸான என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல படங்களின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.
அந்த வகையில் ரஜினிகாந்துடன் குஷ்பூ இணைந்து நடித்த அண்ணாமலை படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் தேவா இசையில் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில் கொண்டையில் தாழம்பூ என்ற பாடல் குறித்த தன்னுடைய நினைவுகளை நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

நடிகை குஷ்பூ: தமிழில் வருஷம் 16 படம் மூலம் தான் நடிகை குஷ்பூ தன்னுடைய சினிமா கேரியரை துவங்கினார். முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் குஷ்பூ. முதல் படமே அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தொடர்ந்து கிடைத்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் குஷ்பு. ரஜினியுடன் பல படங்களில் அவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நிலையில் இருவரும் இணைந்து நடித்த அண்ணாமலை படம் ரஜினிக்கு மிகச் சிறப்பாக அமைந்தது.
அண்ணாமலை படம்: இந்த படத்தில் அண்ணாமலை அண்ணாமலை என்ற பாடலில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொண்டையில் தாழம்பூ என்ற பாடலும் மிகச் சிறப்பாக அமைந்தது. ஆனால் ஷூட்டிங்கின்போது இந்த பாடலை கேட்டுவிட்டு குஷ்பூ சிரித்து விட்டாராம். இது என்ன தாழம்பூ, வாழைப்பூ என்றும் இது எப்படி ரசிகர்களை கவரும் என்றும் அவர் ரஜினியிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், திரையரங்கில் இந்த பாடலுக்கு கிடைக்கப் போகும் வரவேற்பை நேரடியாக பார்க்குமாறு கூறியதாக குஷ்பூ தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாடலை பார்த்து பயந்த குஷ்பூ: தொடர்ந்து படம் ரிலீசானவுடன் கமலா தியேட்டரில் சென்று இந்த படத்தை பார்த்துள்ளார் குஷ்பூ. ரசிகர்களுடன் இணைந்து அவர் இந்த படத்தை பார்த்த நிலையில் இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு தான் மிகவும் பயந்துவிட்டதாகவும், தியேட்டரை விட்டு வெளியில் ஓடி வந்து விட்டதாகவும் குஷ்பூ பேட்டியில் தொடர்ந்து கூறியுள்ளார். அதில் கூடையில் என்ன பூ என்று கேட்டுவிட்டு ரஜினிகாந்த் கையை ஆட்டி ரசிகர்களிடமே கேட்பதாக காட்சி அமைந்திருக்கும். அதற்கு ரசிகர்கள் மிகச் சிறப்பான கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் சில்லறை காசுகள், பூக்கள் ஆகியவற்றை தூவி அந்த பாடலை கொண்டாடியதாகவும் குஷ்பூ தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
சூப்பர் ஹிட்டடித்த அண்ணாமலை படம்: அண்ணாமலை படத்தில் தன்னுடைய நண்பனுடன் போட்ட சவாலில் ஜெயிக்கும் வகையில் தொடர்ந்து பணம் சம்பாதித்து முன்னேறுவார் ரஜினிகாந்த். அண்ணாமலையின் அப்பாவித்தனத்தை பார்த்து காதலிக்கும் குஷ்பூ, வயதான நிலையில் அவரது அந்த அப்பாவி தனத்தை மீண்டும் பெறுவதாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருக்கும். படத்தில் சரத்பாபு ரஜினியின் நண்பராக நடித்திருந்தார். படத்தில் ரஜினி மற்றும் குஷ்புவின் ஜோடி மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது, படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் தேவா இசையில் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் இந்த படம் குறித்து குஷ்பூ தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











