“உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருது“… அஜித்தை புகழ்ந்த பிரபல நடிகை !
சென்னை : உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருது, என பிரபல நடிகை ட்விட்டரில் அஜித்தை புகழ்ந்துள்ளார்.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படத்தின் சண்டைக் காட்சிகளும், பைக் ரேஸ் கட்சிகளும் அஜித் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வலிமை
நீண்ட ஆண்டுகள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த வலிமை படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளிலும் காலை 4 மணிக்கே வலிமை படம் திரையிடப்பட்டது. ரசிகர்கள் அஜித் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் ஹுமா குரோஷி, கார்த்திகேயா, போனி கபூர் மக்களோடு மக்களாக வந்து படத்தை பார்த்தனர்.

பல கோடி வசூல்
கொரோனாவுக்கு முன்பிருந்தே ரசிகர்கள் இப்படத்துக்காக காத்திருந்ததால் வலிமை படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தமிழகத்தில் மட்டுமே ஏறக்குறைய 1000க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வலிமை திரைப்படம் தமிழகத்தில் ரூ.36.17 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவிழாப்போல கூட்டம்
மேலும் சென்னையில் மட்டுமே ரூ.182 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான அஜித் படங்களில் இதுவே அதிக வசூல் செய்த படமாகவும் கூறப்படுகிறது. நேற்று, எந்த பக்கம் திரும்பினாலும் அஜித் ரசிகர்களின் கூட்டம் திருவிழாப்போல இருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பல திரைப்பிரபலங்கள் அஜித்தின் மெர்சலான பைக் ரேஸிங்கை பாராட்டி வருகின்றனர்.

அஜித்தை புகழ்ந்த குஷ்பு
அந்த வகையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், " My #GeorgeClooney #Thala உனக்கு உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது!!! " என கூறி நடிகை ஹுமா குரேஷி, கார்த்திகேயா, தயாரிப்பாளர் போனி கபூர் என அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











