Actress Kushboo: என்னது கல்யாணமா.. மகளின் விருப்பத்தை சொன்ன குஷ்பூ!

சென்னை: நடிகை குஷ்பூ 80 மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக கமல். ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். ஒரு கட்டத்தில் இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ அவந்திகா அனந்திதா என இரு பெண் குழந்தைகளுக்கு தாயானார்.

இவர்களில் அவந்திகாவிற்கு நடிக்க ஆசை என்றும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவரது நடிப்பு ஆர்வத்தை தெரிந்துக் கொண்டு வீட்டிலேயே அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.தன்னுடைய சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து குஷ்பூ பகிர்ந்துள்ளார்.

Kushboo Aranmanai 4 Sundar C Avanthika 4

நடிகை குஷ்பூ: நடிகை குஷ்பூ 80 மற்றும் 90 காலகட்டங்களில் மிக பிரபலமான மற்றும் முன்னணி நாயகியாக ரஜினிகாந்து, கமல்ஹாசன், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்தவர். சிறுவயதிலேயே ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்த இவர் நாயகியாக வருஷம் 16 படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். ஒரு கட்டத்தில் இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரு மகள்கள் உள்ளன.

மகளின் விருப்பம்: இதில் அவந்திகா நடிகையாக ஆசைப்படுவதாக குஷ்பூ தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவந்திகாவிற்கு திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் வரும் செப்டம்பர் மாதம் வந்தால் தான் அவளுக்கு 24 வயது பூர்த்தி ஆவதாகவும் லைஃப்பை என்ஜாய் பண்ணட்டும் என்றும் குஷ்பூ உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும் அவள் நடிகையாக விரும்புவதாகவும் தன்னுடைய தயாரிப்பில் இல்லாமல் மற்ற தயாரிப்பில் அவள் நடிக்க உள்ளதாகவும் குஷ்பூ தெரிவித்துள்ளார். தன்னுடைய மகளின் விருப்பத்திற்கு இணங்க அவளுக்கு நடிப்பு பயிற்சியை குஷ்பூ கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

குஷ்பூ முயற்சி: முன்னணி நடிகர்களுடன் இணைத்து அவந்திகாவை நாயகியாக்க குஷ்பூ முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 80 மற்றும் 90களில் ரசிகர்களை கவரும் நாயகியாக வலம் வந்தவர் குஷ்பு. கொழுக் மொழுக் என்ற இவரது உடல்வாகு ஏராளமான ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. தற்போதும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார் குஷ்பூ. மேலும் தனது கணவருடன் இணைந்து தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவர்களது தயாரிப்பில் வெளியான அரண்மனை 4 படம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்தது குறிப்பிடப்பட்டது.

சுந்தர் சியின் திட்டம்: இந்த படத்தை தொடர்ந்து சுந்தர் சி அடுத்தடுத்து கலகலப்பு 3 மற்றும் தமன்னாவுடன் ஒரு ஹாரர் படம் என படங்களை இயக்க கமிட்டாகியுள்ளார். இதில் கலகலப்பு 3 படத்தை தனது சொந்த தயாரிப்பிலேயே உருவாக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தில் விமல், சிவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X