என் அப்பா தான் எனக்கு வில்லன்.. சின்னத்தம்பி படத்தில் கரகாட்டக்காரன் கனகா.. மனம் திறந்த குஷ்பு
சென்னை: அப்பா செய்த கொடுமைகளை வெளியே சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது. நான் 16 வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்க தொடங்கிட்டேன். அப்பா என்னை கன்ட்ரோல் பன்றது பிடிக்கவில்லை. அம்மாவையும் ரொம்ப கொடுமைப்பத்திட்டாரு அதில் இருந்து வெளியே வரவும் தான் நான் நானாக இருக்க முடிந்தது என நடிகை குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், சினிமாவில் நடிக்க வந்தது குறித்தும் பெண்ணாக செய்த சாதனை குறித்தும் குஷ்பு மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் குஷ்புவிற்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். குறிப்பாக வடநாட்டு பெண்ணாக வந்து ரசிகர்களுக்கு பிடித்த தமிழ் பேசக்கூடிய நடிகையாகவும் இருக்கிறார். இயக்குநர் சுந்தர் சியின் மனைவியான இவர் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு அரசியலில் கவனம் செலுத்தி வரும் குஷ்பு திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். தற்போது இவரது தயாரிப்பில் கேங்கர்ஸ் படம் வெளியாக இருக்கிறது. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தனது மனதில் பட்டதை வெளிப்படையாக குஷ்பு தற்போது பிரபல தொலைக்காட்சி பேட்டியில் அளித்திருக்கும் பேட்டி பலரையும் கவர்ந்திருக்கிறது. இதில், தமிழ் சினிமா குறிததும் அவர் நடித்த படங்கள் மற்றும் குடும்ப நிலை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஹேமமாலினி வீட்டில் வளர்ந்தேன்: நான் சின்ன பிள்ளையாக இருந்த மும்பையில் இருந்தபோது நடிகை ஹேமமாலினி வீட்டில் தான் இருப்பேன். என் பெரிய அண்ணன் கல்லூரியில் படித்த போது ஹேமமாலியின் அண்ணன் மகளும் நண்பர்கள். அதனால், நான் அவங்க வீட்டிற்கு அடிக்கடி போவேன். ஹேமமாலினியின் வீட்டை பார்க்கும் போது ஒரு அன்பு நிறைந்த பேரன்பு கொண்ட வீடாகத்தான் பார்க்கிறேன். காவலாளியை வைத்து விரட்டியது கிடையாது. யார் அவங்க, இங்கே வந்து ஏன் நிற்கிறார்கள் என்று கேட்டது இல்லை. அந்த மாதிரி என்னிடம் நடந்துகொண்டது இல்லை. ஹேமமாலினி மேடம் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளத்திற்கு நானும் சென்றிருக்கேன். சில நேரங்களில் அவங்களுக்கு மேக்கப் போட்டிருக்கேன். அவங்களை பார்த்து தான் நடிக்க ஆசைப்பட்டேன். சின்ன வயதில் சினிமா என்பதே தெரியாமல் நடிக்க வந்தேன் என குஷ்பு தெரிவித்தார்.
கார்த்திக் என்ற முரளி: பிறகு தமிழ் சினிமா குறித்து பேசிய குஷ்பு, தமிழ் சினிமாவில் முதன் முதலாக தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்த போது கன்னடம் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்தேன். தமிழுக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டேன். பின்னர் வருஷம் 16 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு 16 வயது. கார்த்திக்கை சினிமாவில் நடிப்பதற்கு முன்பே தெரியும். அவர் சினிமாவில் நடிக்க வந்த பிறகு கார்த்திக் என மாற்றிவிட்டார். அவரை முரளி முரளி என்று தான் அழைப்போம். நானும் முரளியும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் பஹத் பாசில் சார் படம் என்றதும் ரொம்ப ஹேப்பியாக இருந்தது. சோலோ ஹீரோயினா கார்த்திக்கோட நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்ற விருப்பமும் இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் என்னை வந்து கார்த்திக் சைனிஷ் பட்லர் என கிண்டல் அடிப்பார். கார்த்திக் மாதிரி பட்டப்பெயர் வைக்க முடியாது. அவர் எனக்கும் மட்டும் இல்லை அவர் கூட நடிக்கும் நடிகர்கள் நடிகைகளுக்கு பட்ட பெயர் வைத்து தான் கூப்பிடுவார். இதை பார்த்துக்கொண்டே இருந்த இயக்குநர் பஹத் பாசில் படத்தில் வசனமாகவே மாற்றிவிட்டார். அப்படி எனக்கு கிடைத்த பட்டப்பெயர் தான் சைனிஷ் பட்லர். ஆனால், அந்த பெயர் வைத்தது கார்த்திக் என சிரித்த முகத்துடன் குஷ்பு தெரிவித்தார்.

சின்னத்தம்பி பட வாய்ப்பு: பிரபுவுடன் சின்னத்தம்பி படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு, சின்னத்தம்பி படம் என் வாழ்வில் மறக்க முடியாத படமாக இருந்தது. இப்படம் என்னை அனைத்து மக்களிடமும் கொண்டு போய் சேர்த்தது. ரசிகர்கள் என்னை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு கமல் சாருடன் மைக்கேல் மதன காமராஜன், நடிகன் என ஹிட் படங்களில் நடித்திருந்தேன். ஆனாலும் வாசு சார் சின்னத்தம்பி படத்தில் நந்தினியாக என்னை வேறு மாதிரி காட்டினார். ஆனால், சின்னத்தம்பி படத்தில் நடிக்க இருந்தது நான் கிடையாது. நடிகை கனகா நடிக்க வேண்டிய படம். அந்த சமயத்தில் கரகாட்டக்காரன் படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் அவங்க நடிக்க கமிட் ஆகிட்டாங்க. வாசு சார் இயக்கிய நடிகன் படத்தில் நடித்தபோது நான் நடித்த ஆரத்தி எடுங்கடி படத்தை வாசு சார் பார்த்துள்ளார். பிறகு நான் நடித்தால் சரியாக இருக்கும் என முடிவு வாசு சார் முடிவெடுத்திருக்கிறார். அப்பவே வாசு சார் வந்து என்னுடயை நந்தினி இவதான் என அடம்பிடித்தார். ஆனால், தயாரிப்பாளர் சண்டை போட்டிருக்கிறார். கிளாமர் ரோலில் நடிக்கும் பெண் எப்படி சென்டிமென்ட் காட்சிகளில் நடிக்கும் என கேட்டுள்ளார். ஆனால், வாசு சார் என் மீது நம்பிக்கை வைத்து எடுத்து வெற்றிப்படமாக மாற்றினார் என குஷ்பு தெரிவித்தார். அப்படம் எனக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் எனவும் குஷ்பு தெரிவித்தார்.

அப்பா கொடுத்த டார்ச்சர்: தனது குடும்பம் குறித்து பேசிய குஷ்பு கண்ணீர் விடும் நிலையில் பதில் அளித்தார். குஷ்பு கூறியதாவது, எனது அப்பாவின் முன் கோபத்தால் இந்தியில் அடுத்தடுத்து இழப்புகளை சந்தித்தேன். தவறான படங்களில் நடித்து மார்க்கெட் இல்லாமல் போனது. அப்போ எனக்கு 15 வயது அந்த நேரத்தில் தென்னிந்திய படங்களில் நடிக்க முடிவெடுத்தேன். என் வாழ்வில் நான் எடுத்த சரியான முடிவு இது தான். இதை என் வாழ்நாளிலும் மறக்கமாட்டேன் என குஷ்பு கூறினார். பிறகு பேசிய அவர், கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருந்தபோது சென்னையில் வாடகை வீட்டில் இருக்கிறேன். அப்போது அப்பாவுக்கு மும்பையில் வேறு குடும்பம் இருப்பது தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தேன். அப்பாவை பார்க்க பிடிக்காமல் போனது. சின்ன வயதில் என் அம்மாவை அடித்து கொடுமைப்படுத்துவது, அண்ணன்களை ரத்தம் வரும் வரையில் அடிப்பது என கொடுமைப்படுத்தினார்.என் சின்ன அண்ணன் தான் அப்பாவின் கைகளை பிடித்து இனிமேல் என் அம்மா மேலே கை வைக்காதீங்க. நாங்க வளர்ந்துட்டோம் எனக் கூறி அப்பாவை விட்டு பிரிந்து வந்தோம். ஒரு அப்பாவா எனக்கு மட்டும் இல்லை என் அம்மா சந்தித்த கொடுமைகளை பார்க்கும்போது அழுகையாக இருந்தது என குஷ்பு தெரிவித்தார்.
வைராக்கியம்: ஒரு முறை மும்பையில் யாரை நம்பி போவது என்ற நிலை வருகிறது. தமிழ்நாட்டை விட்டு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என் அண்ணன், அம்மாவை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்த நேரத்தில் என் அப்பா என்னை அழைக்க வந்தார். அப்போது, நானும் என் அம்மாவுக்கும் விஷத்தை த்துவி குடித்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேனே தவிர உன்னுடன் வரமாட்டேன். உன் முன்னாடி ஒரு வீடு வாங்கி வாழ்ந்து காட்டுவதாக அப்பாவிடம் சவால் விட்டேன் என குஷ்பு தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











