பிரபு யாருன்னே தெரியாது.. கமல் மாதிரி ஒருவரை.. நடிகை குஷ்பு அளித்த பேட்டி

சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு தற்போது நடிப்பையும் தாண்டி தேசிய அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இவர் தற்போது நடிகர் ரஜினி குறித்து பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அதில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் பிரபு குறித்தும் குஷ்பு கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இதுதொடர்பாக விமர்சனங்களும் எழுந்துள்ளன,.

வருஷம் 16 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் குஷ்பு. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். நடிகை குஷ்புவிற்கு கோயில் கட்டிய ரசிகர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றனர். அந்தளவிற்கு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். தற்போது தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் அவர் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் பேட்டி அளித்த அவர், சினிமா, அரசியல், குடும்பம் பற்றி தெரிவித்தார். பின்னர், ரஜினிகாந்த் அரசியல் என்ட்ரி குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

actress-kushboo-spoke-about-her-cinematic-experience-in-a-recent-interview

கமல்ஹாசனை கல்யாணம் பண்ணனும்: தனது சினிமா அனுபவம் குறித்து பேசிய குஷ்பு, இந்தியில் படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஜினியின் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. ஆனால், எனது அப்பா மறுத்துவிட்டார். தென்னிந்தியாவில் இருந்து வந்த நடிகர் என்றும் அவர் அங்கே எந்தமாதிரி ஹீரோ எதுவும் தெரியாததால் அப்பா மறுத்துவிட்டார். எனக்கு தென்னிந்தியாவில் பெரிய நடிகர் என்றால் கமல்ஹாசன் தான் நினைத்திருந்தேன். கமல் நடித்த ஏக் துஜே கேலியே படம் மிகப்பெரிய ஹிட். அவர் இந்தியா முழுக்க ஃபேமஸ் ஆகியிருந்தார். அப்பவே கல்யாணம் பண்ணா கமல்ஹாசன் மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணனும் மனதில் நினைத்திருந்தேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

actress-kushboo-spoke-about-her-cinematic-experience-in-a-recent-interview

பிரபு சாரை யாருன்னு தெரியாது: தமிழ் படங்களில் நடித்த அனுபவத்தை கூறிய குஷ்பு ரஜினி குறித்தும் தெரிவித்துள்ளார். தர்மத்தின் தலைவன் கன்னட படங்களில் நடித்தபோது ஏவிஎம் ஸ்டுடியோவில் சூட்டிங் நடந்தது. அப்போது சுட்டு போட்டாலும் தமிழ் தெரியாது. தி நகர் வழியாக ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு சென்றபோது அந்த வழியாக பிரபு சார் ரோடை கிராஸ் பண்ணி போனாரு. அப்போ என்னுடைய மேக்கப் மேன் என்னிடம் வந்து நீங்க ஒருமுறை பிரபு சாரை மீட் பண்ணனும் என்றதும் நான் யார் அந்த பிரபு என கேட்டேன். அவர் ஷாக் ஆகி பார்த்தார். அப்போது பிரபு சார் யாருன்னே தெரியாது; பிரபு யாருங்க என்று கேட்டேன் அவர் போயிட்டு இருக்காரு என கூறினார். சிவாஜி சார் பையன் பெரிய நடிகர் என்றும் சொன்னதும் அப்படியா என்றேன். அப்போதுதான் இருவருக்கும் அறிமுகம் கிடைத்தது. பிறகு பிரபு சார் மூலம் தேவர் மகன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்தேன் என குஷ்பு தெரிவித்தார்.

actress-kushboo-spoke-about-her-cinematic-experience-in-a-recent-interview

ஷாக் ஆன ரஜினி: தர்மத்தின் தலைவன் படத்தின் படப்பிடிப்பில் எனக்கு சுஹாசினி மேடம் கல்லூரி முதல்வர் மாதிரி தெரிந்தார். எதுவும் பேசமாட்டாங்க ஹலோ மேடம் என்று சொன்னால் கூட அமைதியாக ஹாய் அவ்ளோதான். எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. நான் அங்கு வேலை செய்பவர்களை கவனித்தபோது வாடா போடா என பேசிக்கொள்வார்கள் நான் அதை அன்பான வார்த்தை என்று தவறாக புரிந்துகொண்டேன். ஒருநாள் ரஜினி சார் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு கிளம்பும்போது எல்லோரிடம் நான் செல்கிறேன் என்று மராத்தியில் கூறினார். அப்போது அவரை பார்த்து நான் போடா என கூறிவிட்டேன். மொத்த யூனிட்டும் என்னை பார்த்து ஷாக் ஆனது. ரஜினி சார் ஷாக் ஆகி நின்னுட்டாரு. அப்புறம் பிரபு வந்து என்னிடம் போடா என்றால் மரியாதையான வார்த்தை இல்லை. போயிட்டு வாங்கன்னு சொல்லவேண்டும் என புரிய வைத்தார் என்றும் குஷ்பு தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X