மாமியாரான பிறகும் இப்படியா? இந்த காலத்து இளவட்டம் போல.. பேன்ட்,ஷர்ட், தொப்பியோடு போஸ் கொடுத்த குஷ்பூ
சென்னை: பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, பின் கோலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை குஷ்பூ. அண்மையில் தனது மூத்த மகளுக்குத் திருமணம் முடித்து மாமியாராகப் பொறுப்பேற்றுள்ள குஷ்பூ, தற்போது உடல் எடையைக் குறைத்து அப்படியே 2 கே (2K) கிட்ஸ் ரேஞ்சுக்கு செம்ம ஸ்டைலிஷாகப் பகிர்ந்துள்ள புதிய லுக் போட்டோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது
'வருஷம் 16' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான குஷ்பூ, அதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கோலிவுட்டின் டாப் ஹீரோயினாக மாறினார். நடிகர் பிரபுவுடன் இணைந்து அவர் நடித்த 'சின்னத்தம்பி' திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், மை டியர் மார்த்தாண்டன் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார், சத்யராஜ், ஜெயராம் என அன்றைய காலகட்டத்தின் அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
அவந்திகாவின் திருமணம்: முறை மாமன் படத்தில் நடித்த போது, அந்தப் படத்தின் இயக்குநர் சுந்தர்.சி-யை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் குஷ்பூ. இந்த நட்சத்திர தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அவந்திகா சுந்தருக்கும், ஷ்ரவன் சீனிவாசனுக்கும் கடந்த மாதம் கோவாவில் மிகவும் கோலாகலமாகவும் தடபுடலாகவும் திருமணம் நடைபெற்று முடிந்தது. இதன் மூலம் குஷ்பூ தற்போது அதிகாரப்பூர்வமாக ஒரு மாமியாராகியுள்ளார்.

ஸ்லிம் ஃபிட் லுக்: ஒருகாலத்தில் குஷ்பூ என்றாலே கொழுக் மொழுக் அழகு என்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் தியேட்டர்களில் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால், தற்போதோ அவர் தனது உடல் எடையைக் கணிசமாகக் குறைத்து, இளம் நடிகைகளுக்கு இணையாக அல்ட்ரா-மாடர்ன் ஸ்டைலிஷ் தோற்றத்தில் காட்சியளித்து ஆச்சரியப்படுத்தி வருகிறார். அண்மையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பச்சைப் புற்கள் நிறைந்த நந்தவனப் பின்னணியில், கறுப்பு நிற ஷர்ட், சாம்பல் நிற லூஸ்-ஃபிட் பேன்ட், காலில் ஒயிட் ஷூ மற்றும் தலையில் கறுப்பு நிற மங்கி கேப் அணிந்து, ஒரு காலைத் தூக்கி மடித்து இந்த காலத்து இளவட்டங்கள் போல செம்ம கெத்தாகப் போஸ் கொடுத்துள்ளார். மாமியாரான பிறகும் குறையாத குஷ்பூவின் இந்த இளமைத் துடிப்பையும் மாஸான லுக்கையும் பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களைத் தட்டிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications